கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியால் யாழ் டிப்போக்கு வழங்கப்பட்ட பஸ் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக யாழ் பொலிஸில் சாரதி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் மீது செம்மணிச் சந்தியில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலையடுத்து பயணத்தை ரத்து செய்த சாரதி பஸ்சை யாழ் டிப்போக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment