New Videos from Youtube
Showing posts with label viduppu. Show all posts
Showing posts with label viduppu. Show all posts

சிறுவன் கையை கடித்து தின்ற கரடி...

மிருகக்காட்சி சாலையிலிருந்த கரடியொன்றுக்கு அதனது கூண்டினூடாக உணவளிக்க முயற்சித்த 9 வயது சிறுவன் ஒருவனது கரத்தை கரடி கடித்துத் துண்டித்து உண்ட விபரீத சம்பவம் மத்திய சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெனான் மாகாணத்திலுள்ள பிங்டிங்ஷான் ஹெபிள் வனப்பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியால் கை கடியுண்ட சிறுவன் உடனடியாக பிங்டிஷ்ஷானிலுள்ள 152ஆம் இலக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்நிலையில் மருத்துவர்கள் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற சிறுவனது கடித்து துண்டாக்கப்பட்ட வலது கரத்தின் எஞ்சிய பகுதியை வெட்டி அகற்றியுள்ளனர்.

தீபாவளி அன்று எந்தெந்த சேனலில் என்னென்ன படங்கள்..!

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகளோடு புதுப்படமும் ரீலீஸ் ஆவது வாடிக்கை. இந்த ஆண்டு தியேட்டர்களில் மெகா ஹிட் படங்கள் மோதுவதை போல, தொலைக்காட்சிகளில் மெகா ஹிட் படங்கள் மோத இருக்கின்றன.

தீபாவளியன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி சேனல்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விஜய் டிவி:

மான் கராத்தே:

திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வெளியான புத்தம் புதிய திரைப்படம் ’மான் கராத்தே’. இப்படம் தீபவளியன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நான் சிகப்பு மனிதன்

திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம். நான் சிகப்பு மனிதன் மேட்னிக்கு ஒளிபரப்பாகிறது.

ராஜா ராணி ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள ராஜா ராணி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஜெயா டிவி:

கோச்சடையான்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இந்தியாவில் உருவான முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படம். தீபாவளி தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

சன் டிவி:

ஜில்லா:

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் ஜில்லா சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆர்.டி.நேசன் இயக்கத்தில் டி.இமான் இசையைமப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

அஞ்சான்:

சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்திருக்கும் அஞ்சான் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இதுவரை முன்னோட்டம் போடவில்லை

ஜீ தமிழ்:

யாமிருக்க பயமே:

கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடித்திருக்கும் யாமிருக்க பயமே திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் தீபாவளி தினத்தன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மஞ்சப்பை:

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை மாலை 5 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவி

குருவி:

விஜய் த்ரிஷா நடித்த குருவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனல்களைத் தவிர பாலிமர், புதுயுகம், வேந்தர், என இன்னும் பல சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

இந்த திரைப்படங்களோடு கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி; இந்திய குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கு விராத் கோஹ்லி தலைவராக செயற்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுடனான போட்டி, வீரர்களின் ஊதியப் பிரச்சினையால் கைவிடப்பட்டதையடுத்து இலங்கையுடன் வரும் நவம்பரில் ஒரு போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து முதல் 3 ஒரு நாள் போட்டியில் தோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக முதல் 3 ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி கேப்டனாக செயற்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக 5 ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
வீரர்களின் விவரம்:

விராட் கோலி

ஷிக்கர் தவான்

அஜிங்க்யா ரஹானே

சுரேஷ் ரெய்னா

அம்பதி ராயுடு

ரித்திமான் சாஹா

ஆர் அஸ்வின்

ரவீந்திர ஜடேஜா

முகமது ஷமி

உமேஷ் யாதவ்

இஷாந்த் சர்மா

அமித் மிஸ்ரா

முரளி விஜய்

வருண் ஆரோன்

அக்ஷர் படேல்

கண் முன்னே சாவினைக்கண்டு மீளும் மனிதர்கள்

பலர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பியதாக அறிந்திருப்பீர்கள், நேரில்  பார்த்ததுண்டா?

இதோ மயிர் இழையில் உயிர் தப்பும் காட்சிகள் ,


இந்த வார ராசிபலன்!!


மேஷம்:

அடுத்தவரின் நற்செயலை மனதார பாராட்டும், மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் ஒருசில கிரகங்கள் உங்களுக்கு துணை புரியும். வாழ்க்கைத் துணைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அதனால், குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். தொழில், வியாபார வளர்ச்சி சராசரியாக இருக்கும். பண வரவு அளவாக இருக்கும். பணியாளர்கள் புதிய தொழில் நுணுக்கம் பின்பற்றி, பணிச்சுமையை ஓரளவு குறைத்துக்கொள்வர். உங்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே நன்மைகளின் அளவு குறையாமல் கிடைக்கும். குடும்பத்திற்கான பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். அதனால், பணக்கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். உங்களிடம் பொறாமை குணம் உள்ள ஒருவர், உங்களுக்கு உதவுவதுபோல் நடித்து, உங்களுக்கு இடையூறு உருவாக்குவார்புதியவரை நண்பராக ஏற்பதில் நிதான அணுகுமுறை பின்பற்றவும்.

ரிஷபம்:

மனதை புத்துணர்வுடன் வைத்து செயலில் வெற்றி பெறும், ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக உள்ளது. தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து கூடுதல் லாப விகிதம் பெற முடியும். பணியாளர்கள் சிறப்பாகப் பணி புரி து கூடுதல் சலுகைகள் பெறுவர். வாழ்வில் கூடுதல் வளம் பெற தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி ஆலோசனை கிடைக்கும். கடவுள் அருள் நிறைந்து கிடைக்கும். உங்கள் செயல்கள் சிறப்புற இறவனருள் துணை நிற்கும். வீடு வாகனத்தில் விரும்பிய மாறுதல் செய்வீர்கள். பெண்கள் கணவரின் அன்பு பாசம் சீராகக் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர்.

மிதுனம்:

தன் தகுதி, திறமை உணர்ந்து பணிபுரியும், மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் பெரும்பாலான கிரகங்கள் நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது. இதனால், மனம் செயலில் புதிய உற்சாகம் உண்டாகும். அக்கம் பக்கத்தவரிடம் கருணை மனதுடன் பேசி நல் அன்பை வளர்ப்பீர்கள். இல்லறத்துணை உங்கள் மேலான குணங்களை உறவினரிடம் பேசிப் பெருமையடைவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் ஆதாய பண வரவும் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றி, நிர்வாகத்தின் நன்மதிப்பையும் சலுகைப் பயன்களையும் பெறுவர். புதிய வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேற அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்திலிருந்து கிடைக்கிற வருமானம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வர். பண வசதிக்கேற்ப புத்தாடை அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு படிப்புக்கான பண வசதி திருப்திகர அளவில் கிடைக்கும்.

கடகம்:

எதிர்ப்புகளை உரிய வகையில் சரி செய்யும், கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் அக்கறை மற்றும் கண்காணிப்பு தேவைப்படும். பணியாளர்களில் சிலர், நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மீறுவதால், தண்டணைக்குள்ளாக நேரும். நற்பெய்ரைக் கெடுத்துக்கொள்வதையும் தவிர்க்க இயலாது. இல்லறத் துணை ஆறுதல் மனப் பாங்குடன் உங்களுக்கான உதவியை வழங்குவார். தற்சமயம் உங்களை மதிப்புடன் நடத்துகிறவர்கள் கூட குறை சொல்கிற மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். உடல் நலம் கொஞ்சம் பாதிக்கப்படலாம். உங்கள் அன்றாடப் பணிகள் தடைப்படாமல் இருக்க, உடல்நலத்தில் அக்கறை தேவை. வாகனம் ஓட்டும்போது வேகம் கூடாது. குடும்பப் பெண்கள் சேமிப்பை கணவருக்குத் தந்து உதவுவர். மாணவரகள் படிப்பில் கவனம் குறையும். வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பு பின்னடையாமல் இருக்கும்.

சிம்மம்:

புன்னகை முகபாவத்துடன் பணி மேற்கொள்ளும், சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. புத்திரர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பீர்கள். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து, முக்கியமான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத் தேவைகளுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். நீண்டகாலக் கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் உறவினர்கள் உங்கள் அருமைபெருமைகளை உணர்ந்து கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பு சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். மாணவர்கள சாகச விளையாட்டுக்களைத் தவிர்க்கவேண்டும்.

கன்னி:

உலக நடப்புக்களை அறிவதில் ஆர்வமுள்ள, கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் சில கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால், தேவையற்ற செலவுகளைக் தவிர்த்தால் மட்டுமே நீங்கள் பணக்கடன் பெறுவதிலிருந்து தப்பிக்கலாம். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்கு இப்போது எல்லா இடங்களிலும் மதிப்பு இருக்காது. வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவதால், பயண முறை எளிதாகும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. உடல்நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். உங்கள் வாழ்க்கைத் துணை குடும்ப பாசத்துடன் நடந்துகொள்வார். தொழிலில் அளவான மூலதனமும் அதிகமான உழைப்பும் தேவைப்படும். பெண்கள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.

துலாம்:

சோதனையான நேரத்திலும் மன உறுதியுடன் பணிபுரியும், துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன. இனிய எண்ணங்கள் மனதில் உருவாகி செயல்களை நிறைவேற்ற புதிய உற்சாகம் கிடைக்கும். இளைய சகோதரர் வழியில் மங்கல நிகழ்ச்சி நடத்த சாதகமான சூழ்நிலை உருவாகும். உறவினர்களிடமிருந்து கூடுதல் அன்பு பாசம் கிடைக்கும். பூர்வீக சொத்திலிருந்து பணப் பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற புதிய மாற்றங்களைப் பின்பற்றுவீர்கள். உபரி பண வரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து , நல்ல முறையில் தேர்ச்சி பெறுவர்.

விருச்சிகம்:

நியாயமான சிந்தனைகளை மட்டுமே நிறைவேற்றும், விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆன்மீக நம்பிக்கைகளை மனதில் வளர்த்து, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதுவரை சில விஷயங்களில் உங்களுக்கு இருந்துவந்த சந்தேகம் நீங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்பும் கூடுதல் வருமானமும் பெறுவர். எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். பெண்கள் வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து ,அதிக மதிப்பெண் பெறுவர்.

தனுசு:

துணிந்த மனம் துன்பத்தை மாற்றும் என நம்பும், தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் கிரகங்கள் சாதகமாக உள்ளது. வாழ்க்கைத் துணையின் மனக் குறையை அக்கறையுடன் சரி செய்வதால், குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமைந்து, வாழ்வில் கூடுதல் வளம் பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கும். சமயோசிதமாகப் பேசி உறவினர் நண்பர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வாழ்வியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உதவும் மனப்பாங்குடன் பேசுவது ஒற்றுமையைப் பாதுகாக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியர் ,பெற்றோரிடம் நன்மதிப்பு பெறுவர்.

மகரம்:

பிறருக்கு இயன்ற அளவில் உதவும் நல்மனம் உள்ள, மகர ராசிக்காரர்களே, இந்த வாரம் சில கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. கவனச் சிதறல் இல்லாமல் பணியாற்றினால் மட்டுமே பெறுகிற நன்மையின் அளவு ஓரளவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஜாதக பலன் சில எதிர்பாராத நன்மைகளைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையின் கூடுதல் அன்பும் பாசமும் மனதை நெகிழ வைக்கும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அளவாக இருக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். வாகானத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் குடும்ப நலன் சிறக்க தம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும்.

கும்பம்:

உழைப்பு உயர்வு தரும் என்ற உணர்வுடன் பணியாற்றும், கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம் கிரகங்கள் அனுகூலமாக அமைந்து அளவற்ற நன்மைகளை வாரி வழங்குகின்றன. வாழ்வில் பலகாலம் திட்டமிட்ட செயல் ஒன்றை இப்போது தொடங்குவீர்கள். நணபர்களின் உதவி கிடைக்கும். சாமர்த்தியமாக பணிபுரிந்து அதிக நன்மை பெறுவீர்கள். சிலருக்கு வீடு வாங்குகிற திட்டம் இனிதே நிறவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான பாதுகாப்பை உருவாக்குவீர்கள். வாழ்க்கைத் துணை உங்களின் நல்ல குணத்தை மனரதாரப் பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிக்க புதிய இயந்திரங்களை வாங்குவீர்கள். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் பெறுவர். மாணவர்கள் படிப்பில் ஒளிவிட்டுப் பிரகாசித்து பெற்றோரிடம் பரிசுப் பொருள் கேட்ட்டுப் பெறுவர்.

மீனம்:

லட்சிய மனதுடன் செயல்பட்டு உரிய நன்மை பெறும், மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் சில கிரகங்கள் சாதகமற்ற வகையில் செயல்படுகின்றன. இதனால் இனம் புரியாத குழப்பத்தில் தடுமாறுவீர்கள். அடுத்தவர் கூறும் தேவையற்றப் பேச்சுக்களுக்கு மதிப்பளிக்கவேண்டாம். நீங்கள் பெற்ற பணக்கடன் உங்களை நெருக்கும். அந்த சமயத்தில், குடும்பஉறுப்பினர் உதவியாக இருப்பர். வீடு,வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறையைப் பின்பற்றவும். பிள்ளைகள் உங்கள் நண்பர்களிடம் வருத்தம் கொள்வர். உங்களின் ஆலோசனை அவர்களை வழி நடத்தும். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும். வாழ்க்கைத் துணையின் நம்பிக்கைக்கு குறைவு வராமல் நடப்பது குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் தாமத கதியில் இருந்தாலும் பண வரவு சீரான அளவில் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமின்றி யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

குழந்தையை சரமாரியாக தாக்கும் தாய்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார்.

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன.

கின்னஸ் சாதனையின் வேதனை video

கின்னஸ் சாதனைகள் பற்றி இணையங்களில் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்

ஆனால் அவர்கள் அந்த சாதனையை செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று பாருங்கள்.

விற்பனைக்கு வருகிறது உலகின் முதலாவது பறக்கும் கார் (VIDEO)

உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம பொறியியலாளர் ஸ்டெபன் க்ளீன் குறிப்பிட்டுள்ளார்.

AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது.

1990 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தற்போது கைகூடியுள்ளதாக குறித்த காரின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள The Pioneers Festival இல் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இறந்தும் சம்பாதிக்கும் பிரபலங்கள்: மைக்கேல் ஜாக்ஸன் முதலிடம்

இறந்த பின்பும் அதிகம் சம்பாதிக்கும் உலக பிரபலங்களின் பட்டியலில் மைக்கேல் ஜாக்ஸன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர் இசை ஆல்பம் மூலம் கடந்த 11 மாதங்களில் 14 கோடி டாலர்கள் அதாவது 840 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 

பிரபல பாப் பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி 330 கோடி ரூபாய் வருவாயுடன் 2வது இடத்தில் உள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை எலிசபெத் டெய்லர் இவ்வரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.

15 வது மாடி ஜன்னல் கம்பியில் தலை சிக்கி தொங்கிய சிறுமி…

15வது மாடியிலிருந்த தனது குடியிருப்பின் ஜன்னலால் வெளியே இறங்க முயற்சித்த 5 வயது சிறுமியொருவர் ஜன்னல் கம்பிச் சட்டங்களுக்கிடையே தலை சிக்கிக்கொண்டு தொங்கிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் தென்மேற்கேயுள்ள சொங்கிங் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்திலிருந்தே மேற்படி லிலி என்ற சிறுமி ஜன்னல் சட்டங்களுக்கிடையில் தலை சிக்கிய நிலையில் தொங்கியுள்ளார்.

சம்பவ தினம் லிலியின் பெற்றோர் அவரை வீட்டில் தனியாக வைத்து பூட்டி விட்டு தமது பணிகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்தே அந்த சிறுமி ஜன்னல் சட்ட இடைவெளி மூலம் வெளியேற முயற்சித்து சிக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைய மற்றொரு மீட்புப் பணியாளர் ஜன்னல் சட்டத்தை வளைத்து சிறுமியை மேலே தள்ளியுள்ளார். தொடர்ந்து சிறுமி மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

24 மணிநேரத்தில் 517 விபத்துகளை ஏற்படுத்திய விளம்பரப் பலகை?!!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் வேனில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரினால் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதுவும் 24 மணி நேரத்தில். இச்சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் சரஃபான்(Sarafan Advertising Agency) என்ற விளம்பர நிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தியை செய்துள்ளது. பெண்ணின் மார்பை மிகப்பெரிய அளவில் வரைந்து அதில் ‘They Attract’ என்ற வாசகத்தை பொறித்து, அந்த படத்தை 30 வேன்களின் பக்கவாட்டு பகுதியில் வைத்தது. வேனின் பக்கவாட்டு பகுதியில் இதுபோன்று உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தால் அதிக மக்களை சென்றடையும் என்ற கருத்தை சொல்வதற்காகத்தான் இந்த விளம்பரம் என்று கூறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது.


இந்த விளம்பர நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே 24 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் டிரைவிங் செய்துகொண்டே இந்த விளம்பரத்தை பார்த்ததால், விபத்தில் சிக்கியுள்ளனர். ஒரே நாளில் இந்த விளம்பரத்தால் 517 விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ள அந்நிறுவனம், எங்கள் விளம்பர யுக்தி மக்களை சென்றடைந்துள்ளது என்பது இந்த விபத்துக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

3 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ், 20 ஆண்டுகள் நீடிக்கும் பேட்டரி

இன்னும் இரண்டு ஆண்டுகளில் செல்போனை 3 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்துவிடலாம். அதோடு சுமார் 20 ஆண்டுகளுக்கு பேட்டரியை மாற்ற வேண்டிய தேவையே இருக்காது.

ஆம், இரண்டு நிமிடங்களில் ரீசார்ஜ் செய்வதுடன், இருபது வருடங்கள் ஆயுள் கொண்ட சூப்பர் பேட்டரி தொழில்நுட்பத்தை சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாகும், ஒரு எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக ஜார்ஜ் செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் சென் ஜியாடாங்கூறுகையில், இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம் இல்லை. இது, ஏற்கனவே உள்ள லித்தியம் ஐயன் பேட்டரியின் முன்னேற்றம் தான். ஏற்கனவே பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயன் பேட்டரியில் உள்ள கிராபைட் ஆனோடிற்கு பதிலாக, இதில் விலை மலிவான டைட்டானியம் டையாக்ஸைடு ஜெல்(titanium dioxide gel) பயன்படுத்தப்படுகிறது.

இது தான் நேனோஸ்ட்ரக்சர்ஸாக மாறி இந்த அதிவேக சார்ஜிங்கிற்கு காரணமாகிறது. இந்த சிறிய மாற்றமே இதுவரை பயன்பட்டு வந்த லித்தியம் ஐயன் பேட்டரியின் ஆயுளை 20 ஆண்டுகளாக செய்துள்ளது. இதன் மூலம் சார்ஜ் செய்யும் வேகம் 20 மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் உருவாக்கியுள்ள இந்த பேட்டரி மூலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனங்கள் பயன்பெறும்.

செல்போன் முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வரை, இதனைப் பயன்படுத்த முடியும் என்றார். இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட பேட்டரிகள் இன்னும் இரண்டாடுகளில் விற்பனைக்கு வந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இளம் பெண்களின் கரு முட்டையை பாதுகாக்கும் பேஸ்புக்…

பேஸ்புக் நிறுவனத்தில் கடமையாற்றும் இள வயதுடைய பெண்களின் கரு முட்டையை அதி குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து பாதுகாக்கும் திட்டமொன்றை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பெண்கள் திருமணம் செய்து இள வயதிலேயே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதால் தொழில் ரீதியாக பின்னடைவை சந்திப்பதாகவும் மேற்படிப்பை இடைநிறுத்தி விடுவதாகவும் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட விரும்பும் குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் பெண்கள் ஆரோக்கியமான கரு முட்டைகளை அதிகூடிய பாதுகாப்பு மிக்க குளிரூட்டியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அவர்கள் தொழில் ரீதியான முன்னேற்றத்தினையும் கல்வித் திறனையும் பெற்றுக்கொண்ட பின்னர் அந்த கரு முட்டையினைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றினை உருவாக்கிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுத்தி வருகின்ற நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. சிலிக்கொன் வெலி என்று சொல்லப்படுகின்ற மிகப் பிரபலமான அமெரிக்க நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் இம்முறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கரு முட்டையை பாதுகாப்பாக சேமிக்க விரும்பும் பெண்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 12 500 யூரோவை செலுத்துகின்றன. எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுமுதல் ஆப்பிள் நிறுவனமும் இத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

7 கால்கள், இரு வால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

மடுல்கலை வட்டகலை தோட்டத்தைச் சேரந்த ராமையா சுப்பையா என்பவரின் பசு மாடு இன்று அதிகாலை 7 கால்கள், இரு வால்களுடன் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

கன்று குட்டி இறந்நத நிலையில் பிறந்ததாகவும் எனினும் இந்த அதிசயத்தை பார்வையிட நூற்று கணக்கானோர் வருகைத்தருவதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வெளியானது Windows 10 : டவுன்லோடு லிங்க் உள்ளே…

ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் OS-ஐ அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அளித்தாலும், மக்களிடையே அது பெரும் வரவேற்பை பெறவில்லை. பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அளித்தது.

எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை எதிர்பார்த்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது. ஆரம்ப காலத்தில் இது குறித்து பல தகவல்கள் கசிந்தன. இதன் பெயர் விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய OS-ஐ “விண்டோஸ் 10” என்ற பெயருடன் வெளியிட்டது.

இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், பெரும் இழப்பினையும் கொடுத்தது.எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது.

இதில் சில புதிய வசதிகளையும் அளிக்கிறது மைக்ரோசாப்ட். அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் Shift கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை (Technical Preview Version) மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், விமர்சனங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 OS சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதைப்பற்றி, மைக்ரோசாப்ட் கூறவில்லை. ஆப்பிள் நிறுவனம் தன் OS-ஐ இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 10-ன் ப்ரிவ்யூ வெர்சனை http://preview.windows.com என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

38க்கு மேற்பட்ட நோயாளர்களை படுகொலை செய்த மருத்துவ நர்ஸ்…

இத்தாலிய மருத்துவமனை ஒன்றில் 38க்கு மேற்பட்ட நோயாளர்களை படுகொலை செய்ததாக சந்தேகத்தில் அங்கு பணியாற்றி வந்த மருத்துவ செவிலியர் ஒருவரை அந்நாட்டு போலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

78 வயதான ரொஸா கால்டெ ரோனி என்ற பெண் அளவுக்கதிகமான பொட்டாஸியம் ஊசி மருந்தின் மூலம் ஏற்றப்பட்ட நிலையில் மரணமானதையடுத்து வட இத்தாலியைச் சேர்ந்த லூகோ நகரைச் சேர்ந்த மேற்படி மருத்துவ செவிலியரான டானியலா பொக்கியலி (Daniela Poggiali) (42 வயது) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை விசாரணைக்குட்படுத்திய போலிஸார் அந்த மருத்துவ செவிலியர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 38 பேருக்கும் அதிகமானோரை படுகொலை செய்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். தனக்கு தொந்தரவாகவுள்ளதாக கருதிய நோயாளிகளையே அவர் படுகொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

அத்துடன் சில சந்தர்ப்பங்களில் அவர் நோயாளர்களை அவர்களின் குடும்பத்தினர் கோவமூட்டும் வகையில் நடந்து கொண்டமைக்காக படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. எனினும் மேற்படி படுகொலைகளை டானியலாதான் செய்தார் என்பதை சட்டப் பிரகாரம் நிரூபிப்பது கடினமாகவுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற 'பாம்பு ரோபோ'

அமெரிக்காவில் ஆபத்தில் இருப்பவரைக் கண்டறிந்து காப்பாற்றும் பாம்பு வடிவிலான ரோபோ ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்லும் ரோபோவை அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும் திறன் படைத்தவை. இது ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்து மீட்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக ஆழ்துளை கிணறுகளில் மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்து காப்பாற்ற இயலும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2230 அடி உயர கட்டிடம்: சீனர்களின் பிரம்மாண்டம்...

உலகின் உயரமான கட்டிடத்தை கட்டுவதற்கு சீன நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. இதன் உயரம் சுமார் 2230 அடிகள் இருக்கும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த கட்டிடத்தில் வாழ்வது மேகத்தின் நடுவே வாழ்வது போன்ற அனுபவத்தை தரும் என்பதற்காகவே, இதற்கு ’க்லவ்ட் சிட்டிசன் ப்ரொஜக்ட்’(Cloud Citizen project) என பெயரிட்டுள்ளனர். இந்த ப்ரொஜக்ட்-ஐ அர்பன் ப்யூச்சர் ஆர்கனைஷேசன்(Urban Future Organisation), சி ஆர் டிசைன்(CR-design) மற்றும் சாமெர்ஸ் டெக்னிக்கல் யூனிவர்சிட்டி(Chalmers Technical University) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்க உள்ளன.

இந்த கட்டிடத்தில் சோலார் மூலம் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளுடன் உள்ளே ஐ.டி கம்பெனிகள், வணிக வளாகங்கள் மற்றும் கலாச்சார பள்ளிகள் ஆகியவையும் இடம் பெறுமாம். சூப்பர் சிட்டி என பெயரிடப்படவுள்ள இந்த கட்டிடத்தை 2230 அடி உயரத்தில் 1.7 மில்லியன் சதுர அடியில் கட்ட போகின்றனராம்.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெறும். துபாயின் பர்ஜ் காலிஃபா(Burj Khalifa)-வில் உள்ள கட்டிடம் 2717 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்தின் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்தும் எஞ்சினியர்களை வரவழைக்க உள்ளனர். சீனாவின் உள்ள ஷென்ஷன் பே(Shenzhen Bay) என்ற இடத்தில் அமைய உள்ள இந்த கட்டிடத்தை சீனாவின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டால் கூட எவ்வித ஆச்சரியமும் இல்லை.

9 மாதங்களில் 160 யானைகள் பலி… அதிர்ச்சி தகவல்...

மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவை யானைகள். ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது.

யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதால் யானைகள் காடுகளை ஒட்டியுள்ள மக்கள் வாழும் ஊர்களுக்குள் புகுந்து அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநில மேற்குத்தொடர்ச்சி வனப் பகுதிகளில், அதிக அளவில் வாழும் யானைகள் கொல்லப்பட்டுவருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனவிலங்குகள் நல அமைப்பான, டாஸ்க் போர்ஸ் என்ற அமைப்பு, சமீபகாலமாக கேரளாவில் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 12 ஆண் யானைகள், 60 பெண் யானைகள் உட்பட, 106 யானைகள் இறந்துள்ளன என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன.

இதுகுறித்து கூடுதல் முதன்மை வனத்துறை 'டாஸ்க் போர்ஸ்' செயலர் வி.கே.வெங்கடாசலம் கூறியதாவது:

சட்ட குறைபாடுகள் தான், யானைகள் இறப்பிற்கு முக்கிய காரணம். உடனடியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட விதிகளை கடுமையாக்கினால், யானைகள் இறப்பதை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தாய் பாலில் வெண்ணெய்: அமெரிக்க பெண் சாதனை...

தாய்ப்பாலில் இருந்து வெண்ணெய் எடுத்து சாதனை புரிந்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்.

பாலில் இருந்துதான் வெண்ணெய் எடுப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த மிச்சேலி டாஸ்(MichelleDoes) என்ற பெண் ஒருமணி நேரம் தனது மார்பில் இருந்து பால் எடுத்து பின்னர் அதனை பக்குவப்படுத்தி வெண்ணெயாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த வெண்ணெயை அவர் பிரட் இல்லாமல் வெறும் தாய்ப்பால் வெண்ணெயை மட்டும் சாப்பிடுவாராம். அந்த வெண்ணெயை அவரே சாப்பிடுவது போன்று புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இதுபோன்ற ஒரு சுவையான வெண்ணெயை இதுவரை தான் ருசித்ததில்லை என்று கூறியுள்ளார். தனது மார்பகத்தில் இருந்து தாய்ப்பால் எடுப்பது முதல் வெண்ணெய் உற்பத்தி செய்து சாப்பிடுவது வரை படிப்படியாக புகைப்படம் எடுத்து அவர் ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template