சிறுவன் கையை கடித்து தின்ற கரடி...

மிருகக்காட்சி சாலையிலிருந்த கரடியொன்றுக்கு அதனது கூண்டினூடாக உணவளிக்க முயற்சித்த 9 வயது சிறுவன் ஒருவனது கரத்தை கரடி கடித்துத் துண்டித்து உண்ட விபரீத சம்பவம் மத்திய சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெனான் மாகாணத்திலுள்ள பிங்டிங்ஷான் ஹெபிள் வனப்பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியால் கை கடியுண்ட சிறுவன் உடனடியாக பிங்டிஷ்ஷானிலுள்ள 152ஆம் இலக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்நிலையில் மருத்துவர்கள் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற சிறுவனது கடித்து துண்டாக்கப்பட்ட வலது கரத்தின் எஞ்சிய பகுதியை வெட்டி அகற்றியுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template