பெண்ணை கட்டிப்போட்டு பிள்ளையை கொலை செய்வதாக மிரட்டி 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த இருவர் இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொள்ளை இடம்பெற்ற சமயத்தில் கணவர் வியாபார நடவடிக்கை ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்ததாக இரட்டைக்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஜெனட் சுசிலா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கணவர் வீட்டில் இருந்து வெளியில் செல்வதை நன்கு அறிந்தவர்களே திட்டமிட்டு இக்கொள்ளையை புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment