அம்மாவின் பாசத்தில் தூக்கில் தொங்கிய மகள் ,யாழில் சம்பவம்

பெற்ற தாய் வீதியில் அனாதையாக திரிவதை தாங்க முடியாத மகளான 5 பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த போது பிள்ளைகளினால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் விமலாதேவி (வயது 46) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே இன்று திங்கட்கிழமை காலை 06.10 அளவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

8 பிள்ளைகளை பெற்ற 85 வயதுடைய மூதாட்டியான விமலாதேவியின் தாயாரை ஏனைய பிள்ளைகள் கவனிக்கவில்லை.

மகளுடன் இருந்த மூதாட்டி பின்னர் ஏதோ காரணத்திற்காக வீதியில் அனாதையாக திரிய முயன்றுள்ளார். தாயார் இவ்வாறு அனாதையாக திரிவதை யோசித்து கவலை கொண்டிருந்த மகளான இவர், திங்கட்கிழமை வீட்டில் அறைக்குள் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனைக்கண்ட பிள்ளைகள் தாயாரை காப்பாற்றி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template