பண்டாரவளை – உடமல்வத்த - ஐஸ்லப்பி பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
இவர்கள் முதலில் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
இதில் 11 பேர் பின்னர் தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்
அதிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட 3பேர் பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
அரச பேருந்து ஒன்றே பள்ளத்தில் வீழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டம்பிட்டியவிலிருந்து பண்டாரவளை நோக்கி இன்று 9.45 அளவில் பயணத்தை ஆரம்பித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment