திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, குண்டடத்தை அடுத்த குங்குமம்பாளையம், அரிஜனக் காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது-24). சரக்குவாகன ஓட்டுநரான இவர், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி பக்கத்து வீட்டிற்குள் புகுந்து, அங்கு தனியாக இருந்த 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக, தாராபுரம் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் வி.பரிமளா ஆஜராகி வாதாடினார்.
விசாரணை முடிவில், வெள்ளிக்கிழமையன்று வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், பக்கத்து வீட்டிற்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தனத்னையும், ரூ. 5,000 அபராதமும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10,000 அபராதம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த செல்வகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10,000 அபராதம் என மொத்தம் 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிபதி வசந்த லீலா தீர்ப்பளித்தார்.
ஆனால், குற்றவாளி இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறியதால், அவர் அதிகபட்ச்சமாக 10 –ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் என தெரிகிறது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment