பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் .கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, இன்று அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
பகல் 11 மணி அளவில் பெங்களூரு சிறப்பு கோர்ட் கூடியதும், ஜெயலலிதாவின் ஜாமின் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, நீதிபதி குன்காவிடம் தாக்கல் செய்யப்படும். அதை பரிசீலிக்கும் நீதிபதி, ஜாமினில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவிப்பதற்கான நடைமுறைகளுக்கு உத்தரவிடுவார். அவரடைய உத்தரவு சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் ஜெயலலிதா விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜெயலலிதா வழக்கமாக பயன்படுத்தும் கார், நாற்காலி போன்றவை இன்று சிறை வளாகத்துக்குள் கொண்டு செல்லப்பட்டன. ஜெயலலிதாவுக்காக .ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானம் தயார் நிலையில் உள்ளது. ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், பரப்பன அக்ரகார் சிறை வளாகத்துக்கு வௌியே அ.தி.மு.க.,வினர் சார்பில் வைக்கப்பட இருந்த 500க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகளை, உரிய அனுமதி இல்லை என கூறி போலீசார் கைப்பற்றினர். ஓசூர் சாலையிலிருந்து சிறை வரையான 2 கிலோமீட்டர் தூரத்துக்கும், 10 அடிக்கு ஒரு போலீசார் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.முதல்வர் பன்னீர் செல்வம், இன்று காலை பெங்களூருவுக்கு விமானம் மூலம் சென்றிருப்பதாக சென்னை தகவல் கூறுகிறது.ஜெ.,வை வரவேற்க மனித சங்கலி ; பெங்களூரு சிறையில் இருந்து இன்று விடுதலையாகி சென்னை வரும் ஜெ.,வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து போயஸ்கார்டன் வரை அ.தி.மு.க.,வினர் மனிதசங்கிலியாக நின்று வரவேற்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர். பட்டாசு வெடித்து, மேளம் முழங்கிடவும் தொண்டர்கள் தடல், புடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment