புயல் கரையை கடந்தது: ஆந்திராவில் 3 பேர் பலி- ஒடிசாவில் 2 பேர் பலி

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புய மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது.


ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை.


ஸ்ரீகாகுளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர். விகாப்பட்டினத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் இறந்தார்.


புயல் கரையை கடந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகியது. ஸ்ரீகாகுளத்தில் 68.2 மி.மீ அளவும், இச்சாபுரத்தில் 139 மி.மீ அளவும் மழை பெய்துள்ளது. ஹுத்ஹுத் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 2 பேர் பலியாகினர்.


ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில், மீனவர் ஒருவர் தனது படகை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்த முயன்ற போது கடல் கொந்தளிப்பில் சிக்கி பலியானார். இத்தகவலை புரி மீட்புப் பணிகள் ஆணையர் பி.கே.மொஹபத்ரா தெரிவித்தார்.


தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் எச்சரிக்கையும் மீறி அந்த மீனவர் சென்றதாலேயே பலியானதாக தெரிகிறது. இதுவரை மீனவரின் அடையாளம் காணப்படவில்லை.


கேந்தரப்பா மாவட்டத்தில் மக்களை வெளியேற்றும் மீட்புப் படகு கழிழ்ந்ததில் 9 வயது சிறுமி ஒருவர் பலியானார். இதேபோல் அதே மாவட்டத்தில் 9 வயது சிறுவன் ஒருவரைக் காணவில்லை.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template