ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசாங்கம் நடத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்காக வேலை செய்ய மறுத்த டி.வி. கேமராமேனை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ராத் அல் அஸ்ஸாவி என்பவர் கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி அவரது வீட்டுக்கு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரையும், அவரது சகோதரரையும் பிடித்துச் சென்றனர். அரசுக்கு ஆதரவாக அஸ்ஸாவி வேலை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தே அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அஸ்ஸாவி மற்றும் அவரது சகோதரர் உள்பட மற்றும் இருவரையும் சேர்த்து நேற்று முன்தினம், சமரா கிராமத்தில் பொது இடத்தில் வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது தற்போது தெரியவந்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment