தம்புள்ளை கோர விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை - குருநாகல் வீதியின் கோகருல்ல - இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template