அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ் ஆசனங்களை முன்பதிவு செய்ய 365 அழுத்தினால் போதும்;புதிய முறை அறிமுகம்

தெற்கு அதிவேக வீதி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், கையடக்கத் தொலைபேசி மூலம் ஆசனங்களைப் முன் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாதம் 21ம் திகதி முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கண்டியில் இருந்து காலி வரையான பயணிகள் போக்குவரத்து பஸ்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயணத்தை ஆரம்பிக்க இரண்டு வாரங்களுக்கு முன் தொடக்கம் ஒரு மணித்தியாலங்களுக்கு முன்வரையான காலப்பகுதியில், 365 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம், இவ்வாறு ஆசனங்களைப் பதிவு செய்ய முடியும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template