முச்சக்கர வண்டியில் வந்து போன் திருடியவர்களை பிடித்து கொடுத்த இளைஞர்கள்

சுன்னாகம் பகுதியில் பல நாட்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று அப் பகுதி இளைஞர்களின் முயற்சியால் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் காங்கேயன் வெதுப்பகத்திற்கு அண்மையில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சுன்னாகத்திலிருந்து மல்லாகத்தை நோக்கி ஒருவர் தொலைபேசியில் உரையாடிய படி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியால் முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் அவரை தள்ளி விழுத்தி அவரது தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.


இதனை அவதானித்த அப் பகுதி இளைஞர்கள் முச்சக்கரவண்டியைத் துரத்திச் சென்றுள்ளனர். முச்சக்கர வண்டி வேகமாகச் சென்று மயிலங்காட்டுப் பகுதியில் மாயமானது.


உடனே அந்த வண்டியின் இலக்கத்தை அவதானித்த இளைஞர்கள் சுன்னாகம் பொலிசாருக்கு வழங்கியுள்ளனர். சுன்னாகம் பொலிசார் சந்தேக நபர்களைக் கைது செய்து தொலைபேசியையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சுன்னாகம் பொலிசாரால் மேற்கொள்ளப்படுகிறது
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template