கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் புனரமைப்புக்கு கொரியா நிதியுதவி

கொரியாவின் நிதி உதவியின் கீழ் கல்வி அமைச்சின் ஊடாக, கிளிநொச்சி பிரதேசத்தில் 13 பாடசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, புதன்கிழமை(15) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை,

கொரியக் குடியரசின் உதவியுடன் கல்வி அமைச்சு அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 13 பாடசாலைகளை புனரமைப்பு செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையகமாகக் காணப்பட்ட மாவட்டத்தில் அமைந்துள்ள இப்பாடசாலைகள், ஏறத்தாழ 30 வருட முரண்பாட்டின் காரணமாக பாழடைந்த நிலையில் காணப்பட்டன.

புனித தெரேசா பெண்கள் கல்லூரி, சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, ஸ்ரீ பாரதி வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கோணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் மகா வித்தியாலயம், வடக்கச்சி மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், வேராவில் இந்து மகா வித்தியாலயம், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, கிராஞ்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான தங்குமிடங்கள், 100 வரையிலான வகுப்பறைகளைக் கொள்ளக்கூடிய கட்டடங்கள், மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் போன்ற மேலதிக வசதிகளும் சில பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template