New Videos from Youtube
Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

ஒபாமா சீனா பயணம்

அமெரிக்க அதிபர் ஒபமா நவம்பர் மாதம் சீனநாட்டிற்கு செல்ல உள்ளார். இதனையடுத்த இரு நாட்டு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் கொள்கைகள் பலவற்றில் முரண்பாடு கொண்ட அமெரிக்கா அவ்வவப்போது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு வந்தது. தென் சீன கடலில் சீனா அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளில் அமெரிக்கா தலையிடுவது மற்றும் சீன நாட்டில் மனித உறவுகள் மீறப்படுவதாக அமெரிக்கா குறை கூறுவது என இரு நாட்டிற்கும் இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நநிலையில் சீனாவை சேர்ந்த யாங்ஜியெச்சி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரியை சந்தித்தார். சந்திப்பின் போது இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.
சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

அப்போது அமெரிக்க அதிபர் ஓபாமா வரும் நவம்பர் மாதம் சீன நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு நாட்டிற்கும் இடையே இருந்து வரும் கருத்து வேறபாடுகள் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், காலநிலை மாற்றம்,ஈரான் மற்றும் வடகொரியாவின் அணுமின் திட்டஙகள் குறித்தும் தற்போது உலகம் முழுவதும வேகமாக பரவி வரும் எலோபா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டின் உறவிலும் மேம்பாடு ஏற்படும் என தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். 

இந்தோனேஷியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் ஜோகோ விடோடோ பதவியேற்பு விழாவில் கலந்த கொள்கிறார். பின்னர் அமெரிக்கா திரும்பும் வழியில் ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.

எபோலா: நிதியுதவிக்கு ஐநா மீண்டும் அவசர வேண்டுகோள்

எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நிதியுதவி கோரி ஐநா தலைமைச் செயலர் பான் கி-மூன் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் அவர் ஆரம்பித்த நூறுகோடி- டாலர் நிதிதிரட்டும் திட்டத்திற்கு இதுவரை ஒருலட்சம் டாலர்களே சேர்ந்துள்ளது.

கொடையாளி நாடுகள் சுமார் 40 கோடி டாலர்களை ஐநா அமைப்புகளுக்கும் தொண்டுநிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளன.

பான் கி- மூன் அறிவித்த நிதித் திரட்டல் திட்டத்துக்கு இதுவரை இரண்டு கோடி டாலர்களுக்கே நிதி உறுதிமொழிகள் கிடைத்துள்ளன.

எபோலா தாக்குதலில் சிக்கியுள்ள சியரா,லியோனில் உணவுப் பஞ்சம்

எபோலா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சியரா லியோனில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தால் விவசாயிகள் உயிரிழந்ததும், நோய் பாதிப்புக்கு அஞ்சி பலர் பணிக்கு செல்லாமல் இருப்பதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சியரா லியோனின் 65 சதவிகித மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் 40 சதவிகிதம் விவசாயத்தையே நம்பியுள்ளது. இந்நிலையில் எபோலா வைரஸ் பரவி வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சியரா லியோன் அரசு பருவத்திற்கு ஏற்ப இந்த ஆண்டு பயிர் செய்வது கடினம் என தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் எபொலா வைரஸால் இதுவரை 4 ஆயிரத்து 493 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் உயிருடன் எரித்து படுகொலை…

தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற மோதல்களில் கிராமவாசிகளால் 4 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

யுனான் மாகாணத்தில் புயு கிராமத்திலுள்ள கட்டுமானத் தளத்தில் இடம்பெற்ற மோதல்களால் மொத்தம் 6 கட்டுமானத் தொழிலாளர்களும் இரு கிராம வாசிகளும் உயிரிழந்துள்ளனர். தமது பிராந்தியத்தில் குறிப்பிட்ட வாணிப கட்டடம் கட்டப்படுவது தொடர்பில் கிராம வாசிகள் அதிருப்தியடைந்திருந்தமையே மேற்படி மோதல்களுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததால் போலிஸாரால் அந்த கட்டுமானத்துக்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமற்று இருந்ததாக கூறப்படுகின்றது. பலியான கிராமவாசிகள் இரும்புக் குழாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பூமிக்கு சிறிய தொலைவில் புதிய கிரகம்

சூரிய குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் உள்ளன. அவை இராட்சத ஐஸ் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.

இவை இரண்டும் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்களால் நிறைந்தது. இதனால் அங்கு மீத்தேன் ஐஸ் வடிவத்தில் உள்ளது. எனவே, அக்கிரங்கள் நீலநிற தோற்றத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையே தற்போது ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.

இதில் என்னென்ன இரசாயன பொருட்கள் உள்ளன என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் அமைப்பு யுரேனஸ் கிரகம் போன்று உள்ளது.

இந்த தகவலை ஒகியோ மாகாண பல்கலைகழக விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ குட் தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் ஹீத் நகரைக் கைப்பற்றிய ஐ.எஸ்.

சிரியாவின் கொபானே நகருக்கு அண்மையில் ISIS இன் கடுமையான முற்றுகைப் போரை எதிர்கொண்டு வரும் குர்து படைகளுக்குத் துணையாக செவ்வாய் முதல் தொடர்ந்து இரு நாட்களுக்கு அமெரிக்க யுத்த விமானங்கள் 18 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளன என மத்திய கட்டளைத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சமீபத்திய தாக்குதல்களில் பல IS இலக்குகளுடன் அவர்கள் மறைந்து இருந்த 16 கட்டடங்களும் அழிக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல்களில் அமெரிக்காவின் யுத்த ஜெட்டுக்களுடன் போர் விமானமும் ஈடுபட்டன. இதில் ஹடித்தா அணைக்கு அருகே IS இன் ஆயுதம் கொண்டு சென்ற வாகனமும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொபானேயின் வடபகுதி ISIS வசம் வீழ்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈராக்கில் ISIS போராளிகள் தற்போது அன்பர் மாகாணத்திலுள்ள நகரங்களையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வடமேற்கு ஹீத் நகரிலுள்ள மிகப் பெரிய முகாமாக ஆசாத் முகாம் விளங்குகின்ற போதும் அங்கிருந்து ISIS இன் தாக்குதலை எதிர் கொண்ட ஈராக் இராணுவம் அதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பின்வாங்கி சென்று விட்டதால் ஹீத் நகரின் மையப் பகுதியை ISIS ஆக்கிரமித்து அதனைத் தன் வசப் படுத்தியுள்ளது.

மறுபுறம் இஸ்லாமிய தேச போராளிகளுடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஓர் மாணவர் உட்பட 14 முஸ்லிம்களைத் தான் கைது செய்திருப்பதாக மலேசிய பொலிஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்பிரல் முதற் கொண்டு ISIS உடன் தொடர்புடையவர்கள் என மலேசிய அரசு கைது செய்திருக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக் ஊடகவியலாளர்கள் படுகொலை…

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடந்த 4 நாட்களில் இரு ஈராக்கிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ள வட ஈராக்கிய நகரான மொசூலில் செயற்படும் சதா செய்தி முகவர் நிலையத்தின் ஊடகவியலாளரான மொஹமட் அல் அகிடி கடந்த திங்கட்கிழமை கஸ்லனி எனும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் கடந்த ஜூலை மாதம் டோஹூக் மாகாணத்திற்கு கடத்தப்பட்டிருந்தார். அதேசமயம் ஒரு மாத காலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சமா சாலஹ் அல்டீன் தொலைக்காட்சியின் புகைப்படக்கலைஞர் சாத் மொஹமட் அல் - அஸ்ஸாவி கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களிலிருந்து பெருமளவு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியா டெயிர் அல் - ஸோர் மாகாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டல் குறிப்புகளை இந்த மாத ஆரம்பத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தனர்.

கடந்த இரு மாதங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜேம்ஸ் போலி ஸ்டீவன் ஸொட்லோப் ஆகியோர் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வட கொரியா, தென் கொரியா உயர்மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள்…

வட கொரியா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயமொன்றில் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பன்முன் ஜொம் கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி பேச்சுவார்த்தைகளானது கடந்த 7 வருட காலப் பகுதியில் இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்ற முதலாவது பேச்சுவார்த்தையாக உள்ளது. அண்மைய வாரங்களில் வட கொரியாவும் தென் கொரியாவும் தமது நில மற்றும் கடல் எல்லைகளில் வரையறுக்கப்பட்ட சூட்டு பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.

வட கொரியா மேற்படி பேச்சுவார்த்தைகளை பகிரங்கப்படுத்த விரும்பாததால் அது தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தென் கொரிய பாராளுமன்ற வட்டாரமொன்றை மேற்கோள் காட்டி யொன்ஹைப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனம் தனி நாடு: பிரிட்டன் தீர்மானம் நிறைவேற்றியது

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டன் பார்லிமென்ட் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் தனி நாடு தீர்வை வலியுறுத்தி பிரிட்டன் பார்லிமெண்டில் ஒரு எம்.பிக்களுக்கான ஒரு பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.

இதன் முடிவில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெருவாரியான 262 எம்பிக்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் இது ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்வாக கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை படம் எடுத்தது நாசா விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வெளிப்புறத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல் புறத்தில் காணப்படும் புற ஊதாக்கதிர்கள், கொஞ்சமாக காணப்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள், அந்த கிரகத்தின் வெளிப்புறத்தை சுற்றி காணப்படுவதை, அந்த படம் விளக்குகிறது. இந்த விண்கலம், கடந்த 2013 நவம்பரில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

கடந்த செப்டம்பர் 21ல், செவ்வாய் கிரக வெளிப்புறத்தை அடைந்தது. அங்கிருந்து படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. தொடர்ந்து செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் அந்த விண்கலம் பயணிக்கிறது.

ஐ.எஸ். தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் விதமாக கடத்தல்கள்… படுகொலைகள்

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் மூலம் ஈராக்கிலுள்ள ஷியா தீவிரவாதிகள் சுன்னி இன பொதுமக்களை கடத்திச் சென்று படுகொலை செய்வதில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தது.

ஈராக்கிய அரசாங்கத்தால் ஆதரவும் ஆயுதங்களும் அளிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விதிவிலக்குப்பெற்று மேற்படி ஷியா தீவிரவாதக்குழு செயற்பட்டு வருவதாக மேற்படி சபை கூறுகின்றது.

கடந்த மாதம் ஈராக்கிய பிரதமராக பதவியேற்ற ஹைதன் அல் - அபாடி அனைத்து ஈராக்கியர்களுக்காகவும் ஆட்சி செய்யவுள்ளதாக சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்கு அன்பர் மாகாணத்திலுள்ள ஹிட் நகரிலும் அதனை சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும் ஈராக்கிய படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 180,000 பேருக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து கலந்துரையாட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் 20 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ தலைவர்களும் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நிறுவப்பட்டதையடுத்து அதிகளவான நாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டமொன்று இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். சிரியா கொபேன் நகருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் முன்னேறுவதை தடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்கள் தவறியுள்ளன.

இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் புதிய அறிக்கை குறித்து ஈராக்கிய பிரதமர் இதுவரை விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் ஈராக்கில் நடத்தப்பட்ட பேட்டிகளை அடிப்படையாக வைத்தே மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

58 போட்டிகளில் 40 கோல்கள்: நெய்மார் சாதனை!!!

பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டியில் 4-0 என்ற கோல் கண்க்கில் பிரேசிலிடம் தோல்வியுற்றது ஜப்பான்.

பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது. சிறப்பாக விளையாடிய பிரேசில் கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார்.

22 வயதே ஆகும் நெய்மார் 58 சர்வதேச போட்டிகளில் இதுவரை 40 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து துங்கா பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு பிரேசில் அணி பெற்ற 4–வது வெற்றி இது. உலக கோப்பைக்கு பின் பிரேசில் மொத்தமாகவே 4 போட்டிகளில்தான் கலந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குர்திஷ் கிளர்ச்சியாளர்களை தாக்கும் துருக்கி போர் விமானங்கள்…

துருக்கிய எப் - 16 மற்றும் எப் - 4 போர் விமானங்கள் ஈராக்கிய எல்லைக்கு அண்மையில் ஹக்காரி மாகாணத்திலுள்ள குர்திஷ் தொழிலாளர்கள் கட்சி கிளர்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து திங்கட்கிழமை பின்னிரவு தாக்குதல்களை நடத்தியுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்படி கிளர்ச்சிக் குழு போர் நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியதையடுத்து அந்தக் குழுவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது வான் தாக்குதலாக இது உள்ளது. குர்திஷ் இனத்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட தென் கிழக்கு டக்லிகா கிராமத்திற்கு அண்மையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிரியா எல்லையிலுள்ள கொபேன் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் குர்திஷ் படையினருக்கு துருக்கி உதவ மறுத்ததால் குர்திஷ் இனத்தவர்கள் கடும் சினத்தக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் துருக்கியின் துன்செலி பிரதேசத்தில் துருக்கிய படையினருக்கும் குர்திஷ் இனத்தவர்களுக்குமிடையே பயங்கர மோதல் இடம்பெற்றுள்ளது. துருக்கிய இராணுவ காவலரண் ஒன்றை இலக்கு குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் மூலமே தாம் வான் தாக்குதல்களை முன்னெடுத்ததாக துருக்கிய இராணுவம் தெரிவித்தது.

பெண்கள் இறைவனின் ஆணைப்படி பாலியல் அடிமை, ஐ.எஸ்

ஈராக்கில் தம்மால் பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான யஸிடி இன பெண்களையும் சிறுமிகளையும் இறைவனின் ஆணைப்படியே பாலியல் அடிமைகளாக விற்று வருவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் டக்பி இதழ் ஒன்றிலேயே அந்த தீவிரவாதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் யஸிடி இனத்தவர்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படும் அதேசமயம் ஏனைய இனத்தவர்கள் அவ்வாறு விற்கப்படாமை குறித்து அந்த தீவிரவாதிகள் விபரிக்கையில்;

மதச் சட்டங்கள் பல தெய்வ வழிபாடுகளைப் பின்பற்றும் யஸிடி இனத்தவர்களை அவ்வாறு அடிமைகளாக விற்பதற்கு அனுமதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடமற்றும் மேற்கு ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சின்ஜார் நகரிலான தாக்குதலின் போது பெருந்தொகையான யஸிடி இனத்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதன்போது, ஆண்களையும் பெண்கள் மற்றும் சிறுமிகளையும் வெவ்வேறாக பிரித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆண்களை படுகொலை செய்த பின் பெண்களையும் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பிந்திய டக்பி இதழில் வெளியாகியுள்ள மேற்படி தீவிரவாதிகளின் அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

காசு இருந்தா நீங்க அவுஸ்ரேலியா போகலாம் , புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 13 மிலியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை தரும் வகையில் குடிவரவு விதிகளை புதிதாக அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

ஏற்கனவே அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான்காண்டு காலத்தில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்பவர்களுக்கு நாட்டில் வசிக்க உரிமை தரும் ஒரு திட்டம் அமலில் இருக்கிறது.

அந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாகக் குடியேறிவர்களில் 90 சதவீதத்தினர் சீனாவில் இருந்து வந்தவர்கள்.

ஆஸ்திரேலியா சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் விதிகளை கடுமையாக்கியிருக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய விதிகள் வருகின்றன

உலகின் செக்சியான பெண் ஸ்பெயின் நாட்டு நடிகை குரூஸ்: அமெரிக்க பத்திரிகை தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பானிய நடிகை பெனேலோப் குருஸ், வாழும் செக்சியஸ்ட் பெண்ணாக பிரபல வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எஸ்கொயர் இதழ் இந்த பட்டத்தை குரூசுக்கு வழங்கியுள்ளது. 


இந்த பத்திரிகை நடத்திய ஆய்வில் இதற்கு முன்பு நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, கார்லைஸ் தெரோன் மற்றும் ஹல்லே பெர்ரி ஆகியோர் செக்சியான பெண்கள் பட்டத்தை வென்றுள்ளனர். கடந்தாண்டு ஸ்கேரியட் ஜான்சன் இந்த பட்டத்தை வென்றார். வாழும் செக்சியான பெண் என்ற பட்டத்தை பெறும் 40 வயதான பெனேலோப் குருசுக்கு 9 ஸ்டார்கள் கிடைத்துள்ளன. 

இவர் நடித்து முடித்துள்ள்ள 'மாமா' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பட்டம் குறித்து பெனேலோப் குருஸ் கூறுகையில், நான் இப்போது நடிப்பு, மாடலிங்கைவிட குடும்பத்தை பார்த்துக்கொள்வதில்தான் அதிக அக்கறை காண்பித்து வருகிறேன் என்றார்.

பலஸ்தீனை அங்கீகரிக்குமாறு சர்வதேசத்துக்கு கோரிக்கை

காஸா ,இஸ்ரேல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சர்வதே சத்தின் பார்வை பலஸ்தீனை நோக்கித் திரும்பியுள்ளது என்றே சொல்லவேண்டும். 65 வருடங் களாக பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப் புகளை -அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாத சர்வதேசத் தின் கண்களை காஸா , இஸ் ரேல் யுத்தம் திறந்துள்ளதை பலஸ்தீனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வைத்துள்ளதை அவதா னிக்க முடிகிறது.

காஸா மீதான யுத்தம் நீடிக்க நீடிக்க அழிவுகள் கூடிக்கொண்டு போனமை ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்தப் பிரச்சினை d இஸ்ரேலின் கோர முகம் சர்வ தேசத்தை வேகமாகச் சென்ற டையத் தொடங்கின; பல நாடு கள் இஸ்ரேலின் உற்பத்திக ளைப் புறக்கணிக்கத் தொடங் கின; இஸ்ரேலைக் கண்டிக்கத் தொடங்கின; உலகம் பூராகவும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புகள் கிளம் பின; இடதுசாரிக் கொள்கையு டைய யூதர்கள் கூட இஸ்ரேலை எதிர்த்தனர்.

யுத்தம் முடிவுற்ற பின் பலஸ் தீன் சுயாதீன நாடாக – 1967 ஆம் ஆண்டின் எல்லைகளைக் கொண்டு நிறுவப்பட வேண்டும் என்ற கோ­ம் இப்போது சர்வ தேச அரங்கில் முன்வைக்கப் படுகிறது.
இஸ்ரேல் கைப்பற்றிய பலஸ் தீன நிலங்கள் அனைத்தையும் இஸ்ரேல் 3 வருடங்களுக்குள் தம்மிடம் ஒப்படைக்க வேண் டும் என்று காலக்கெடு விதிக்கும் பிரேரணை ஒன்றை பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐ.நாவுக்குக் கொண்டுவரவுள் ளார்.

சுவீடன் கடந்த வாரம் பலஸ் தீனை சுயாதீன நாடாக அங்கீ கரித்தது. ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த நிலைப் பாட்டை நோக்கிச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2011இல் மற்றுமொரு ஐரோப் பிய ஒன்றிய நாடான ஸ்பெயி னும் நாடாளுமன்றில் பிரே ரணை கொண்டுவந்து நிறை வேற்றியது; பலஸ்தீனை அங் கீகரித்தது.

இவ்வாறு சர்வதேசம் மெல்ல மெல்ல பலஸ்தீனை அங்கீக ரித்து வருகின்றது. இந்நிலை யில், பலஸ்தீனைச் சேர்ந்த மிக முக்கியமான கிரிஸ்தவ குரு மார் மூவர் பலஸ்தீனுக்கு ஆதர வாகக் குரல் எழுப்பத் தொடங் கியுள்ளனர். பலஸ்தீனை அங் கீகரிக்குமாறு சர்வதேசத்துக் குக் கோரிக்கை விடுத்துள்ள னர்.

“பலஸ்தீனை உடனடியாக அங்கீகரிக்குமாறு நாம் இந்தச் செய்தியை பலஸ்தீனின் தலை நகரான தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெரூ சலத்திலிருந்து விடுக்கின்றோம். சர்வதேசத்துக்கு -குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுக ளுக்கு நாம் இந்தக் கோரிக் கையை விடுகின்றோம். நீங் கள் உடனடியாக விரைந்து பலஸ்தீனை அங்கீகரிக்க வேண் டும்; இஸ்ரேலின் பிடியிலிருந்து அதை மீட்டுத்தர வேண்டும்” என மூன்று குருமாறும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

கிறிஸ்தவ குருமார்கள் பலஸ் தீனுக்கு ஆதரவாக d தமது தாய் நாட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது பலஸ்தீன மக் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பலஸ்தீனிலுள்ள கிறிஸ்தவர் கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம் முயற்சிகளில் ஒன்றாகக் கிறிஸ் தவர்களை இஸ்ரேலிய இராணு வத்தில் இணைவதற்கு வரு மாறு இஸ்ரேலிய அரசு கடந்த வருடம் அழைப்பு விடுத்திருந் தது.இது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிளவு களை உண்டுபண்ணும் இஸ் ரேலின் சதி எனத் தெரிவித்து கிறிஸ்தவ குருமார்கள், இரா ணுவத்தில் இணைய வேண் டாம் என கிறிஸ்தவ இளைஞர், யுவதிகளுக்குக் கட்டளையிட்டனர்.

19 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்ற காஸாவில் வெறும் 1,500 கிறிஸ்தவர்களே உள்ள னர். காஸா d இஸ்ரேல் யுத்தத் தில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படு வர் எனத் தெரிவித்து அவர் களை இஸ்ரேலுக்கு வருமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது; அனைத்து வசதிகளும் இலவ சமாகச் செய்துதரப்படும் எனக் கூறியும் அவர்கள் காஸாவை விட்டுப் போகவில்லை. ஹமா ஸின் ஆட்சியில் அவர்கள் நிம் மதியாக வாழ்வதாகத் தெரிவித் தனர்.

அந்த யுத்தத்தில் கிறிஸ்தவர் ஒருவர் மரணித்தும்கூட அவர் கள் காஸாவை விட்டுச் செல்ல மறுத்துவிட்டனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தங்குவதற்குத் தேவாலயத்தில் இடங்கொடுத் தனர்.
பலஸ்தீனை இஸ்ரேலிடமி ருந்து மீட்டெடுப்பதாக இருந் தால் இவ்வாறான ஒற்றுமை தேவை என உணரப்படுகிறது. ஆனால், இஸ்ரேலோ தொடர்ச் சியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி யையே பயன்படுத்தி வருகின் றது. பலஸ்தீனை கூறுபோடுவ தற்கு யூதர்கள் முதலில் பயன் படுத்திய ஆயுதம் இந்தப் பிரித் தாலும் தந்திரம்தான்.

பலஸ்தீன முஸ்லிம்கள் – பலஸ்தீன் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேல் இருக் கின்றது. இதனால்தான் ஹமா ஸும் பாத்தாஹ்வும் ஒன்றி ணைந்ததைக் கடுமையாக எதிர்த்தது இஸ்ரேல். அதை அடிப்படையாக வைத்தே ஹமா ஸுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கியது.

பலஸ்தீனை அங்கீகரிக்கு மாறு -இஸ்ரேலிடமிருந்து அதை முற்றாக மீட்டுத் தருமாறு இன்று சர்வதேசத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் ‡ இன்று பல சர்வதேச நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவாகத் திரும் பியுள்ள நிலையில் பலஸ்தீனர் கள் மாத்திரமல்ல, உலக முஸ்லிம் களே ஒன்றுபடவேண்டிய தேவை எழுந்துள்ளது. அது நடந்தால் மிக விரைவில் பலஸ்தீன் மீட்கப்படும்.

தொலைக்காட்சி அறிவிப்பாளரை சுட்டுக்கொன்ற isil

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசாங்கம் நடத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்காக வேலை செய்ய மறுத்த டி.வி. கேமராமேனை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


அங்குள்ள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ராத் அல் அஸ்ஸாவி என்பவர் கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி அவரது வீட்டுக்கு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரையும், அவரது சகோதரரையும் பிடித்துச் சென்றனர். அரசுக்கு ஆதரவாக அஸ்ஸாவி வேலை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தே அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் அஸ்ஸாவி மற்றும் அவரது சகோதரர் உள்பட மற்றும் இருவரையும் சேர்த்து நேற்று முன்தினம், சமரா கிராமத்தில் பொது இடத்தில் வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இடங்களை தரமட்டமாக்கும் அமெரிக்க படை…

சிரியா எல்லைப் பிராந்திய நகரான கொபேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிழக்கு கொபெனிலுள்ள போலிஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாக கொண்ட சிரியா மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.

அமெரிக்கா வியாழக்கிழமை இரவிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி நிலையம் ஒரு கட்டிடம் மற்றும் இரு வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்படி கூட்டமைப்பின் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதி குழுவின் போர் பிரிவுகளையும் தாக்கியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் கொபேன் நகரில் முன்னேறுவதாக தோன்றினாலும் அந்நகரின் பிரதான பிரதேசங்கள் பிராந்திய குர்திஷ் படையினரின் வசம் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தரை வழியாக குர்திஷ் படையினரும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தொடர்ந்து பயங்கர மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட அறிக்கைகள் கொபேன் நகரின் மூன்றில் ஒரு பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றன. அதேசமயம் சிரியா அயல் நாடான துருக்கி சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனித்து தரை வழித் தாக்குதலை முன்னெடுப்பதை நிராகரித்துள்ளது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி சிரியா ஜனாதிபதி பஷார் அல் அஸாத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது. எனினும் அந்நாட்டிற்கு துருக்கிக்கு உதவுவதற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எபோலா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரை 4,033 பேர் பலி

எபோலா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரை 4,033 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய 4 நாடுகளில் எபோலா வைரஸ் நோய் கடுமையாக பரவியுள்ளது.

இதேவேளை, செனேகல், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா நோயின் தாக்கம் காணப்படுகின்றது.

லைபீரியாவில் எபோலா நோய் தாக்கம் அதிகம் உள்ளதுடன் அங்கு பாதிக்கப்பட்டிருந்த 4076 பேரில் 2,316 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோனில் பாதிக்கப்பட்ட 2,950 பேரில் 930 பேர் இறந்துள்ளனர்.

கினியாவில் பாதிக்கப்பட்ட 1350 பேரில் 416 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 233 சுகாதார பணியாளர்களும் அடங்குவர்.

நைஜீரியாவில் 20 பேர் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேரும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலும் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

காங்கோ நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டுள்ள 71 பேரில் 43 பேர் பலியாகி உள்ளனர். செனேகலில் ஒருவர் இறந்துள்ளார்.

உயிர்க்கொல்லி நோயான இதை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template