அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வெளிப்புறத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேல் புறத்தில் காணப்படும் புற ஊதாக்கதிர்கள், கொஞ்சமாக காணப்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள், அந்த கிரகத்தின் வெளிப்புறத்தை சுற்றி காணப்படுவதை, அந்த படம் விளக்குகிறது. இந்த விண்கலம், கடந்த 2013 நவம்பரில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
கடந்த செப்டம்பர் 21ல், செவ்வாய் கிரக வெளிப்புறத்தை அடைந்தது. அங்கிருந்து படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. தொடர்ந்து செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் அந்த விண்கலம் பயணிக்கிறது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment