9 மாதங்களில் 160 யானைகள் பலி… அதிர்ச்சி தகவல்...

மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவை யானைகள். ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது.

யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதால் யானைகள் காடுகளை ஒட்டியுள்ள மக்கள் வாழும் ஊர்களுக்குள் புகுந்து அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநில மேற்குத்தொடர்ச்சி வனப் பகுதிகளில், அதிக அளவில் வாழும் யானைகள் கொல்லப்பட்டுவருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனவிலங்குகள் நல அமைப்பான, டாஸ்க் போர்ஸ் என்ற அமைப்பு, சமீபகாலமாக கேரளாவில் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 12 ஆண் யானைகள், 60 பெண் யானைகள் உட்பட, 106 யானைகள் இறந்துள்ளன என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன.

இதுகுறித்து கூடுதல் முதன்மை வனத்துறை 'டாஸ்க் போர்ஸ்' செயலர் வி.கே.வெங்கடாசலம் கூறியதாவது:

சட்ட குறைபாடுகள் தான், யானைகள் இறப்பிற்கு முக்கிய காரணம். உடனடியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட விதிகளை கடுமையாக்கினால், யானைகள் இறப்பதை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template