கிணறு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் பலி, மற்றொருவர் காயம்

வாழைச்சேனை - மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது, மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது – 42) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மேலும், இவருக்கு உதவியாக கிணறு தோண்டுவதற்கு நின்ற அதே வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகுமார் (வயது – 32) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணித்தவரின் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மண்னை அகற்றிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் இருவரையும் மூடிய வேலை பொது மக்களின் உதவியுடன் கணபதிபிள்ளை விஜயகுமார் காப்பாற்றப்பட்ட போதும், வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template