மொராக்கோ நாட்டுப் பிரஜையும் பிரான்சில் வசித்து வந்த தீவிரவாதிகளின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்று இரவு மொராக்கோ சர்வதேச விமானநிலையத்தில் வைத்து மொராக்கோ அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளின் தளபதியாக இருந்துள்ளார் , அத்துடன் இவர் பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவரை திருமணம் செய்தது பிரான்சில் வசித்து வந்துள்ளார்
இவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இவரை சில மாதங்களுக்கு முன்னதாக பிரான்ஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் செய்துள்ளனர், எனினும் தமக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறி விசாரணைகளில் இருந்து தப்பியுள்ளார்
எனினும் பிரான்ஸ் புலனாய்வுப் பிரிவினர் இவரை கண்காணித்து வந்துள்ளனர்.
அண்மையில் இவர் மொராக்கோவுக்கு சென்று அங்கிருந்து துருக்கி சென்று ஐஸ் தீவிரவாதிகளுடன் இணைய திட்டமிடுள்ளார்.
இத்தகவலை அறிந்த மொராக்கோ புலனாய்வுத்துறை இவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment