ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி முற்பகுதியில் நடைபெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், கூட்டணி அரசுக்குள் நெருக் கடிகளும் வலுக்கத் தொடங் கியுள்ளன. இதில் குறிப்பாக சிங்கள, பெளத்த வாக்குப் பலத்தைக்கொண்டுள்ள ஜாதிக யஹல உறுமய இறுதிநேரத்தில் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அக்கட்சி இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் தென்னிலங்கை அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதாவது, அரசமைப்பில் மேற் கொள்ளப்பட வேண்டியத் திருத்தங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைத்திட்டத்தை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாது ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் செல்வாரா யில் அதில் அவரைத் தோற்கடிப் பதற்குத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் ஜாதிக யஹல உறுமய முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் நேற்று அறிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம், நாடாளுமன் றத்துக்கு பொறுப்புக்கூறும் பிரதமர் முறை உட்பட அரசமைப் பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடங்கிய கொள்கைத் திட்டத்தை அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் என்ற பெயரில் அத்துரெலிய ரத்தன தேரர் நேற்று வெளியிட்டார்.
இதற்கான நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆளும், எதிரணி தரப்பிலிருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சோபித்த தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பஸில் ராஜபக் , ராஜித்த சேனாரத்ன என பலரும் பங்கேற்றிருந்தனர். இதில் உரையாற்றுகையிலேயே அத்துரெலிய தேரர் மேற்படி எச்சரிக்கையை விடுத்தார்.


.jpg)
.jpg)

.jpg)






Post a Comment