ஒபாமா சீனா பயணம்

அமெரிக்க அதிபர் ஒபமா நவம்பர் மாதம் சீனநாட்டிற்கு செல்ல உள்ளார். இதனையடுத்த இரு நாட்டு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் கொள்கைகள் பலவற்றில் முரண்பாடு கொண்ட அமெரிக்கா அவ்வவப்போது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு வந்தது. தென் சீன கடலில் சீனா அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளில் அமெரிக்கா தலையிடுவது மற்றும் சீன நாட்டில் மனித உறவுகள் மீறப்படுவதாக அமெரிக்கா குறை கூறுவது என இரு நாட்டிற்கும் இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நநிலையில் சீனாவை சேர்ந்த யாங்ஜியெச்சி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரியை சந்தித்தார். சந்திப்பின் போது இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.
சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

அப்போது அமெரிக்க அதிபர் ஓபாமா வரும் நவம்பர் மாதம் சீன நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு நாட்டிற்கும் இடையே இருந்து வரும் கருத்து வேறபாடுகள் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், காலநிலை மாற்றம்,ஈரான் மற்றும் வடகொரியாவின் அணுமின் திட்டஙகள் குறித்தும் தற்போது உலகம் முழுவதும வேகமாக பரவி வரும் எலோபா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டின் உறவிலும் மேம்பாடு ஏற்படும் என தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். 

இந்தோனேஷியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் ஜோகோ விடோடோ பதவியேற்பு விழாவில் கலந்த கொள்கிறார். பின்னர் அமெரிக்கா திரும்பும் வழியில் ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template