செல்பி புள்ள பாடலை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் கத்தி படத்தை படு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா வெளியானபோது அஜீத்தின் வீரமும் வெளியானது. அதனால் அப்போது போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற விசயங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பல இடங்களில் மோதிக்கொண்டனர்.

ஆனால், இப்போது விஜய்க்கு சரியான போட்டி இல்லை. விஷாலின் பூஜை வந்தபோதும் அதை பெரிய போட்டி படமாக விஜய் ரசிகர்கள் நினைக்கவில்லை. அதனால் இந்த முறை கத்திதான் நம்பர்-ஒன் படமாக ஹிட்டடிக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.


இந்த நிலையில், கத்தி ஆடியோ ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், பின்னர் சென்சார் சான்றிதழ் பெற்று படம் திரைக்கு வருவதை உறுதிப்படுத்தினர். அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அப்படத்தில் விஜய் பாடியுள்ள செல்பி புள்ள என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களின கொண்டாட்டத்திற்கு புது எனர்ஜியை கொடுத்துள்ளனர்.


அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் அந்த பாடலை 2 லட்சம் பேருக்கு மேல் ரசித்து ஹிட் பாடலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template