ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் மூலம் ஈராக்கிலுள்ள ஷியா தீவிரவாதிகள் சுன்னி இன பொதுமக்களை கடத்திச் சென்று படுகொலை செய்வதில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தது.
ஈராக்கிய அரசாங்கத்தால் ஆதரவும் ஆயுதங்களும் அளிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விதிவிலக்குப்பெற்று மேற்படி ஷியா தீவிரவாதக்குழு செயற்பட்டு வருவதாக மேற்படி சபை கூறுகின்றது.
கடந்த மாதம் ஈராக்கிய பிரதமராக பதவியேற்ற ஹைதன் அல் - அபாடி அனைத்து ஈராக்கியர்களுக்காகவும் ஆட்சி செய்யவுள்ளதாக சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்கு அன்பர் மாகாணத்திலுள்ள ஹிட் நகரிலும் அதனை சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும் ஈராக்கிய படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 180,000 பேருக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து கலந்துரையாட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் 20 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ தலைவர்களும் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நிறுவப்பட்டதையடுத்து அதிகளவான நாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டமொன்று இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். சிரியா கொபேன் நகருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் முன்னேறுவதை தடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்கள் தவறியுள்ளன.
இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் புதிய அறிக்கை குறித்து ஈராக்கிய பிரதமர் இதுவரை விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் ஈராக்கில் நடத்தப்பட்ட பேட்டிகளை அடிப்படையாக வைத்தே மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment