இணையத்தளங்களில் வேகமாக பரவி வரும் கத்தி கதை...?

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ’கத்தி’ படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே போகிறது. படம் சொன்ன தேதியில் கண்டிப்பாக வெளிவரும் என்று லைகா நிறுவனமும், படத்தை வெளியிட விடமாட்டோம் என்று 150-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளும் மல்லு கட்டி நிற்கின்றன.

இதற்கிடையில் இதுதான் கத்தி படத்தின் கதை என்ற ஒரு தகவல் சமூகத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற அனைவரும் அறிந்ததே. படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னை வருகிறார்.

அங்கு அவர் நண்பர் ரவி என்பவர் விஜய்யை பாங்காக் அனுப்ப முடிவு செய்கிறார். சென்னையில் இருக்கும் சில நாட்களில் விஜய்க்கு, சமந்தா மேல் காதல் வருகிறது, பின் வெளிநாடு பறக்கு நேரத்தில் தான் ஜீவானந்தம் என்ற விஜயை பார்க்க நேரிடுகிறது. முதல் பார்வையிலேயே அவர் ரோட்டில் அடிபட்டு இருப்பது போல் தெரிகிறது. உடனே கதிரேசன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.

பின் தான் தெரிகிறது ஜீவானந்தம் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு பெரிய புள்ளி என்று, பின் கதிரேசன், ஜீவானந்தமாக மாறி அவர் விட்டு போன பணிகளை செய்து முடிப்பதாக அந்த கதையில் உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வாமனது இல்லை, நெட்டில் மிகவும் வேகமாக இந்த கதை பரவி வருகிறது. இது தான் உண்மையான கதையா என்பதை தீபாவளி வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template