38க்கு மேற்பட்ட நோயாளர்களை படுகொலை செய்த மருத்துவ நர்ஸ்…

இத்தாலிய மருத்துவமனை ஒன்றில் 38க்கு மேற்பட்ட நோயாளர்களை படுகொலை செய்ததாக சந்தேகத்தில் அங்கு பணியாற்றி வந்த மருத்துவ செவிலியர் ஒருவரை அந்நாட்டு போலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

78 வயதான ரொஸா கால்டெ ரோனி என்ற பெண் அளவுக்கதிகமான பொட்டாஸியம் ஊசி மருந்தின் மூலம் ஏற்றப்பட்ட நிலையில் மரணமானதையடுத்து வட இத்தாலியைச் சேர்ந்த லூகோ நகரைச் சேர்ந்த மேற்படி மருத்துவ செவிலியரான டானியலா பொக்கியலி (Daniela Poggiali) (42 வயது) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை விசாரணைக்குட்படுத்திய போலிஸார் அந்த மருத்துவ செவிலியர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 38 பேருக்கும் அதிகமானோரை படுகொலை செய்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். தனக்கு தொந்தரவாகவுள்ளதாக கருதிய நோயாளிகளையே அவர் படுகொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

அத்துடன் சில சந்தர்ப்பங்களில் அவர் நோயாளர்களை அவர்களின் குடும்பத்தினர் கோவமூட்டும் வகையில் நடந்து கொண்டமைக்காக படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. எனினும் மேற்படி படுகொலைகளை டானியலாதான் செய்தார் என்பதை சட்டப் பிரகாரம் நிரூபிப்பது கடினமாகவுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template