வெளியானது Windows 10 : டவுன்லோடு லிங்க் உள்ளே…

ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் OS-ஐ அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அளித்தாலும், மக்களிடையே அது பெரும் வரவேற்பை பெறவில்லை. பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அளித்தது.

எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை எதிர்பார்த்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது. ஆரம்ப காலத்தில் இது குறித்து பல தகவல்கள் கசிந்தன. இதன் பெயர் விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய OS-ஐ “விண்டோஸ் 10” என்ற பெயருடன் வெளியிட்டது.

இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், பெரும் இழப்பினையும் கொடுத்தது.எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது.

இதில் சில புதிய வசதிகளையும் அளிக்கிறது மைக்ரோசாப்ட். அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் Shift கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை (Technical Preview Version) மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், விமர்சனங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 OS சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதைப்பற்றி, மைக்ரோசாப்ட் கூறவில்லை. ஆப்பிள் நிறுவனம் தன் OS-ஐ இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 10-ன் ப்ரிவ்யூ வெர்சனை http://preview.windows.com என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template