காசு இருந்தா நீங்க அவுஸ்ரேலியா போகலாம் , புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் குறைந்தது 13 மிலியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை தரும் வகையில் குடிவரவு விதிகளை புதிதாக அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

ஏற்கனவே அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான்காண்டு காலத்தில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்பவர்களுக்கு நாட்டில் வசிக்க உரிமை தரும் ஒரு திட்டம் அமலில் இருக்கிறது.

அந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாகக் குடியேறிவர்களில் 90 சதவீதத்தினர் சீனாவில் இருந்து வந்தவர்கள்.

ஆஸ்திரேலியா சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் விதிகளை கடுமையாக்கியிருக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய விதிகள் வருகின்றன
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template