கத்தி படத்திற்கு பெரும் பிரச்சினையாக இருப்பதே அதன் தயாரிப்பாளர்கள் தான் என்று நாங்கள் ஓராயிரம் முறை சொல்லிவிட்டோம். இருந்தாலும் அந்த பிரச்சினைகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் அடுத்த அடியை எடுத்து வைத்தபடி உள்ளனர் கத்தி தயாரிப்பாளர்கள்.
கத்தி படத்தை எந்த அரங்கிலும் வெளியிட விட மாட்டோம் என்று பல அமைப்புகள் முழங்கியபடி இருக்க, சத்தமின்றி படத்தை பெரும் விலைக்கு அனைத்து ஏரியாக்களிலும் விற்றுவிட்டனர் லைகா நிறுவனத்தினர். தமிழகத்தின அனைத்து ஏரியாவிலும் உள்ள திரையரங்குகள் எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.
படத்தின் கேரள உரிமையை தமீம் பெற்றுள்ளார். தெலுங்கு உரிமை தாகூர் மதுவுக்குக் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் கோல்டி பிலிம்ஸ் கத்தியின் உரிமை பெற்றுள்ளது.
கனடாவில் 20 அரங்குகள், மலேசியாவில் 120 அரங்குகள், இங்கிலாந்தில் 70 அரங்குகள் என பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சர்வதேச அரங்குகளில் வெளியாகிறது கத்தி. வளைகுடா நாடுகள், இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் மேலும் அதிக அரங்குகளில் வெளியாகிறது கத்தி. இதனால் லைகா குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment