பெண்கள் இறைவனின் ஆணைப்படி பாலியல் அடிமை, ஐ.எஸ்

ஈராக்கில் தம்மால் பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான யஸிடி இன பெண்களையும் சிறுமிகளையும் இறைவனின் ஆணைப்படியே பாலியல் அடிமைகளாக விற்று வருவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் டக்பி இதழ் ஒன்றிலேயே அந்த தீவிரவாதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் யஸிடி இனத்தவர்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படும் அதேசமயம் ஏனைய இனத்தவர்கள் அவ்வாறு விற்கப்படாமை குறித்து அந்த தீவிரவாதிகள் விபரிக்கையில்;

மதச் சட்டங்கள் பல தெய்வ வழிபாடுகளைப் பின்பற்றும் யஸிடி இனத்தவர்களை அவ்வாறு அடிமைகளாக விற்பதற்கு அனுமதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடமற்றும் மேற்கு ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சின்ஜார் நகரிலான தாக்குதலின் போது பெருந்தொகையான யஸிடி இனத்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதன்போது, ஆண்களையும் பெண்கள் மற்றும் சிறுமிகளையும் வெவ்வேறாக பிரித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆண்களை படுகொலை செய்த பின் பெண்களையும் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பிந்திய டக்பி இதழில் வெளியாகியுள்ள மேற்படி தீவிரவாதிகளின் அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template