துருக்கிய எப் - 16 மற்றும் எப் - 4 போர் விமானங்கள் ஈராக்கிய எல்லைக்கு அண்மையில் ஹக்காரி மாகாணத்திலுள்ள குர்திஷ் தொழிலாளர்கள் கட்சி கிளர்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து திங்கட்கிழமை பின்னிரவு தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்படி கிளர்ச்சிக் குழு போர் நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியதையடுத்து அந்தக் குழுவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது வான் தாக்குதலாக இது உள்ளது. குர்திஷ் இனத்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட தென் கிழக்கு டக்லிகா கிராமத்திற்கு அண்மையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிரியா எல்லையிலுள்ள கொபேன் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் குர்திஷ் படையினருக்கு துருக்கி உதவ மறுத்ததால் குர்திஷ் இனத்தவர்கள் கடும் சினத்தக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் துருக்கியின் துன்செலி பிரதேசத்தில் துருக்கிய படையினருக்கும் குர்திஷ் இனத்தவர்களுக்குமிடையே பயங்கர மோதல் இடம்பெற்றுள்ளது. துருக்கிய இராணுவ காவலரண் ஒன்றை இலக்கு குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் மூலமே தாம் வான் தாக்குதல்களை முன்னெடுத்ததாக துருக்கிய இராணுவம் தெரிவித்தது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment