வட கொரியா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயமொன்றில் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பன்முன் ஜொம் கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி பேச்சுவார்த்தைகளானது கடந்த 7 வருட காலப் பகுதியில் இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்ற முதலாவது பேச்சுவார்த்தையாக உள்ளது. அண்மைய வாரங்களில் வட கொரியாவும் தென் கொரியாவும் தமது நில மற்றும் கடல் எல்லைகளில் வரையறுக்கப்பட்ட சூட்டு பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.
வட கொரியா மேற்படி பேச்சுவார்த்தைகளை பகிரங்கப்படுத்த விரும்பாததால் அது தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தென் கொரிய பாராளுமன்ற வட்டாரமொன்றை மேற்கோள் காட்டி யொன்ஹைப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment