ஜெ.,க்கு வழங்கிய தீர்பு தவறு என்றால் ஒருபக்க மீசையை எடுத்துவிடுகிறேன்

திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலையில் தே.மு.க. சார்பில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு தே.மு.தி.க. தலைவரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 730 மதிப்பில் 122 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கப்பட்டன.

விழாவில் விஜயகாந்த் ஆற்றிய உரையில், சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்காக அவரது தொண்டர்கள் செய்யும் போராட்டம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் பேசியதாவது:

நான் அரசியலுக்கு பிழைக்க வரவில்லை, உழைக்க வந்து இருக்கிறேன். நான் பிழைக்க வேண்டும் என நினைத்தால் எப்படியெல்லாமோ பிழைத்திருப்பேன். அது உங்களுக்கு தெரியும். மேலே ஒருத்தன் இருக்கிறான், அவன் கணக்கு போட்டுக்கொண்டே இருப்பான். ஆண்டவன் கணக்கை சரியாகத்தான் போட்டு வைத்திருப்பார். அந்த கணக்கு இன்று பலித்துள்ளது.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் காவல்துறை என்னிடம் இதை பேசக்கூடாது, அதை பேசக்கூடாது என்கிறார்கள். நான் என்ன தப்பா செய்திருக்கிறேன்? எனக்கு ஒரு சட்டம் அ.தி.மு.க.வினருக்கு ஒரு சட்டமா? ராமநாதபுரம் மாவட்டத்தில் சையது என்பவர் போலீஸ் காவலில் இறந்தார். அதை கண்டுபிடித்தீர்களா? ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 60 பேர் இறந்ததாக சொல்கிறார்கள்.

அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடித்தீர்களா? காவல்துறை மானிய கோரிக்கையின்போது எங்களுடைய கொள்கை பரப்பு செயலாளர் பேசியபோது, காவல்துறையை பற்றி நீங்களோ உங்கள் கட்சியினரோ பேசக்கூடாது. அதற்கு உங்களுக்கு அருகதை இல்லை என்றார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று? பதவி ஏற்பு விழாவில் மந்திரிகளெல்லாம் அழுகிறார்கள்.

ஏன் ஜெயலலிதா வந்தவுடன் நாங்கள் பதவி ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே? நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஊர் சொத்தையோ மக்கள் பணத்தையோ கொள்ளையடிக்கவில்லை. ஆடு, மாடு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இதுவும் விரைவில் வெளிவரும். முன்பு செய்த தவறுக்கு தான் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும். கனிம வள முறைகேடுகளை கண்டுபிடிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழுவை ஐகோர்ட்டு நியமித்தது.

குழுவை நியமித்து ஒருமாதமாகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. நீதிபதி மைக்கேல் டி குன்கா கொடுத்த தீர்ப்பை, காவல்துறை தவறு என்று சொன்னால் நான் ஒருபக்க மீசையை எடுத்துவிடுகிறேன். சட்டம் தன் கடமையை செய்யும்.

ஜெயலலிதா மட்டுமல்ல ஓம்பிரகாஷ் சவுதாலா, லாலுபிரசாத் யாதவ் ஆகியோரும் தவறு செய்ததற்காக சிறைசென்று வந்திருக்கிறார்கள். நான் ஒருவர் மீது குறைசொல்லி திரித்து பேசித்தான் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைக்கமாட்டேன், மக்களிடம் ஆதரவு கேட்போம். என்று கூறியுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template