ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் வேனில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரினால் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதுவும் 24 மணி நேரத்தில். இச்சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் சரஃபான்(Sarafan Advertising Agency) என்ற விளம்பர நிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தியை செய்துள்ளது. பெண்ணின் மார்பை மிகப்பெரிய அளவில் வரைந்து அதில் ‘They Attract’ என்ற வாசகத்தை பொறித்து, அந்த படத்தை 30 வேன்களின் பக்கவாட்டு பகுதியில் வைத்தது. வேனின் பக்கவாட்டு பகுதியில் இதுபோன்று உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தால் அதிக மக்களை சென்றடையும் என்ற கருத்தை சொல்வதற்காகத்தான் இந்த விளம்பரம் என்று கூறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது.

இந்த விளம்பர நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே 24 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் டிரைவிங் செய்துகொண்டே இந்த விளம்பரத்தை பார்த்ததால், விபத்தில் சிக்கியுள்ளனர். ஒரே நாளில் இந்த விளம்பரத்தால் 517 விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ள அந்நிறுவனம், எங்கள் விளம்பர யுக்தி மக்களை சென்றடைந்துள்ளது என்பது இந்த விபத்துக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment