ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக் ஊடகவியலாளர்கள் படுகொலை…

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடந்த 4 நாட்களில் இரு ஈராக்கிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ள வட ஈராக்கிய நகரான மொசூலில் செயற்படும் சதா செய்தி முகவர் நிலையத்தின் ஊடகவியலாளரான மொஹமட் அல் அகிடி கடந்த திங்கட்கிழமை கஸ்லனி எனும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் கடந்த ஜூலை மாதம் டோஹூக் மாகாணத்திற்கு கடத்தப்பட்டிருந்தார். அதேசமயம் ஒரு மாத காலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சமா சாலஹ் அல்டீன் தொலைக்காட்சியின் புகைப்படக்கலைஞர் சாத் மொஹமட் அல் - அஸ்ஸாவி கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களிலிருந்து பெருமளவு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியா டெயிர் அல் - ஸோர் மாகாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டல் குறிப்புகளை இந்த மாத ஆரம்பத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தனர்.

கடந்த இரு மாதங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜேம்ஸ் போலி ஸ்டீவன் ஸொட்லோப் ஆகியோர் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template