நயன்தாராவின் மாறுபட்ட நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் அனாமிகா. இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த கஹானி படத்தின் ரீமேக் படம்தான் இது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது.
தனக்கு பெரிய திருப்புமுனையாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்த்தார் நயன். ஆனால், ஏற்கனவே கஹானி இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடியதால், தென்னிந்தியாவில் அப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளில் நயனை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை. அதனால் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கே திரும்பி தனி ஒருவன், நண்பேன்டா போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
எனினும் தன்னிடம் கதை சொல்ல வந்த சில புதுமுக டைரக்டர்களிடம், ஒரே மாதிரியாக டூயட் பாடி எனக்கு போரடித்து விட்டது. அதனால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக கூறுங்கள், அதில் இரண்டு சண்டை காட்சிகளாவது இருக்கும்படியாக கதை பண்ணுங்கள் என்று கூறுகிற நயன், அப்படி நீங்கள் கதையுடன் வந்தால் எவ்வளவு கால்சீட் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறியுள்ளாராம்.
அதனால் கவர்ச்சியாக நடிக்க கால்சீட் கேட்க சென்றவர்கள், இப்படி கதையையே மாற்றச்சொல்கிறாரே என்ன செய்வது என்பது புரியாமல் தயாரிப்பாளர்களிடம் நயன்தாராவின் விருப்பத்தை கூறி வருகின்றனர். ஆனால் அனாமிகா கொடுத்த தோல்வியை பார்த்து தயாரிப்பாளர்கள் நன்தாராவுக்கு என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் முழித்து வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment