எபோலா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரை 4,033 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய 4 நாடுகளில் எபோலா வைரஸ் நோய் கடுமையாக பரவியுள்ளது.
இதேவேளை, செனேகல், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா நோயின் தாக்கம் காணப்படுகின்றது.
லைபீரியாவில் எபோலா நோய் தாக்கம் அதிகம் உள்ளதுடன் அங்கு பாதிக்கப்பட்டிருந்த 4076 பேரில் 2,316 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோனில் பாதிக்கப்பட்ட 2,950 பேரில் 930 பேர் இறந்துள்ளனர்.
கினியாவில் பாதிக்கப்பட்ட 1350 பேரில் 416 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 233 சுகாதார பணியாளர்களும் அடங்குவர்.
நைஜீரியாவில் 20 பேர் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேரும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலும் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டுள்ள 71 பேரில் 43 பேர் பலியாகி உள்ளனர். செனேகலில் ஒருவர் இறந்துள்ளார்.
உயிர்க்கொல்லி நோயான இதை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment