தாய் பாலில் வெண்ணெய்: அமெரிக்க பெண் சாதனை...

தாய்ப்பாலில் இருந்து வெண்ணெய் எடுத்து சாதனை புரிந்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்.

பாலில் இருந்துதான் வெண்ணெய் எடுப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த மிச்சேலி டாஸ்(MichelleDoes) என்ற பெண் ஒருமணி நேரம் தனது மார்பில் இருந்து பால் எடுத்து பின்னர் அதனை பக்குவப்படுத்தி வெண்ணெயாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த வெண்ணெயை அவர் பிரட் இல்லாமல் வெறும் தாய்ப்பால் வெண்ணெயை மட்டும் சாப்பிடுவாராம். அந்த வெண்ணெயை அவரே சாப்பிடுவது போன்று புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இதுபோன்ற ஒரு சுவையான வெண்ணெயை இதுவரை தான் ருசித்ததில்லை என்று கூறியுள்ளார். தனது மார்பகத்தில் இருந்து தாய்ப்பால் எடுப்பது முதல் வெண்ணெய் உற்பத்தி செய்து சாப்பிடுவது வரை படிப்படியாக புகைப்படம் எடுத்து அவர் ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template