ஐ.எஸ்.ஐ.எஸ். இடங்களை தரமட்டமாக்கும் அமெரிக்க படை…

சிரியா எல்லைப் பிராந்திய நகரான கொபேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிழக்கு கொபெனிலுள்ள போலிஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாக கொண்ட சிரியா மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.

அமெரிக்கா வியாழக்கிழமை இரவிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி நிலையம் ஒரு கட்டிடம் மற்றும் இரு வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்படி கூட்டமைப்பின் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதி குழுவின் போர் பிரிவுகளையும் தாக்கியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் கொபேன் நகரில் முன்னேறுவதாக தோன்றினாலும் அந்நகரின் பிரதான பிரதேசங்கள் பிராந்திய குர்திஷ் படையினரின் வசம் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தரை வழியாக குர்திஷ் படையினரும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தொடர்ந்து பயங்கர மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட அறிக்கைகள் கொபேன் நகரின் மூன்றில் ஒரு பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றன. அதேசமயம் சிரியா அயல் நாடான துருக்கி சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனித்து தரை வழித் தாக்குதலை முன்னெடுப்பதை நிராகரித்துள்ளது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி சிரியா ஜனாதிபதி பஷார் அல் அஸாத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது. எனினும் அந்நாட்டிற்கு துருக்கிக்கு உதவுவதற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template