தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற மோதல்களில் கிராமவாசிகளால் 4 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
யுனான் மாகாணத்தில் புயு கிராமத்திலுள்ள கட்டுமானத் தளத்தில் இடம்பெற்ற மோதல்களால் மொத்தம் 6 கட்டுமானத் தொழிலாளர்களும் இரு கிராம வாசிகளும் உயிரிழந்துள்ளனர். தமது பிராந்தியத்தில் குறிப்பிட்ட வாணிப கட்டடம் கட்டப்படுவது தொடர்பில் கிராம வாசிகள் அதிருப்தியடைந்திருந்தமையே மேற்படி மோதல்களுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததால் போலிஸாரால் அந்த கட்டுமானத்துக்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமற்று இருந்ததாக கூறப்படுகின்றது. பலியான கிராமவாசிகள் இரும்புக் குழாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment