எபோலா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சியரா லியோனில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் தாக்கத்தால் விவசாயிகள் உயிரிழந்ததும், நோய் பாதிப்புக்கு அஞ்சி பலர் பணிக்கு செல்லாமல் இருப்பதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சியரா லியோனின் 65 சதவிகித மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் 40 சதவிகிதம் விவசாயத்தையே நம்பியுள்ளது. இந்நிலையில் எபோலா வைரஸ் பரவி வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சியரா லியோன் அரசு பருவத்திற்கு ஏற்ப இந்த ஆண்டு பயிர் செய்வது கடினம் என தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் எபொலா வைரஸால் இதுவரை 4 ஆயிரத்து 493 பேர் பலியாகியுள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment