கிளிநொச்சியில் சிரித்து சிரித்து கட்டுரை வடித்த மகிந்த


”வடக்கு மாகாணசபை தோ்தல் நடாத்துவதற்கு முன்னரே , தோ்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கு மாகாணசபையில் எதிரணியில் இருப்வா்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைப்பா்கள் என நான் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். நான் வெற்றி பெறும் நோக்கத்தோடு வடக்கு மாகாணசபை தோ்தலை நடாத்தவில்லை. ” இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.



கிளிநொச்சி மத்தியகல்லுாரியில் 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் மற்றும் விடுதலைப்புலிகளால் சட்டவிரோதமாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட நகைகளை மீண்டும் அவா்களுக்கு கொடுக்கும் நிகழ்விலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டோம். வடக்கு மாகாணசபைத் தோ்தலை ஏன் நடத்த வேண்டும் என எனது கட்சியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா். ஆனால் நான் தோ்தலை நடாத்தினேன். எனக்கு தோ்தல் தோல்வி என்பது பெரிய விடயமல்ல. நான் எத்தனையோ தோ்தலைச் சந்தித்திருக்கின்றேன்.

சுதந்திரமான முறையில் நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்துள்ளீா்கள். அந்தப் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்களே அவதானிக்க வேண்டும். நான் இரணை மடுவுக்கு தென்பகுதியில் இருந்த நீரைக் கொண்டு வரவிரும்புகின்றேன். நான் அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளேன்.

ஆனால் அதற்கு உங்கள் பிரதிநிதிகள் குறுக்கே நிற்கின்றார்கள். நான் நினைத்தேன் உங்கள் முதலமைச்சா், பிரதிநிதிகள் இங்கு வருவார்கள் என்று. ஆனால் அவா்கள் வரவில்லை.

அவா்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் இங்கே வந்திருந்தால் உங்கள் மனங்கள் மாறி விடும் என்று. ஆனால் அவா்கள் இங்கே வந்திருந்தாலும் , வராது விட்டாலும் உங்கள் மனம் மாறாது. அத்துடன் நான் இங்கே என்ன சொன்னாலும் உங்கள் மனம் மாறாது என எனக்குத் தெரியும்.

ஆனால் நான் உங்களை நம்புகின்றேன். எனவே வட இலங்கை மக்களையும், தென்னிலங்கை மக்களையும், கிழக்கிலங்கை மக்களையும், இலங்கையில் உள்ள எல்லா மக்களையும் என்னுடைய மக்களாகத்தான் நான் எண்ணுகின்றேன்.

வைக்கோல் பட்டறை நாய் போல் நீங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். நீங்கள் யாரிடம் பொறுப்பைக் கொடுத்தீா்களோ, யாரை உங்களது தலைவா்களாக தெரிவு செய்தீா்களோ அவா்களிடத்தில் கூறுங்கள் அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என.

இலங்கையில் வடபகுதியிலேயே இந்த வருடத்தில் அதிக அளவு பல்கலைக்கழக மாணவா்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதையிட்டு எனக்கு சந்தோசமாக இருக்கின்றது எனவும் அவா் தெரிவித்தார்.








Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template