தோஷம் கழிப்பதாகக் கூறி நகை பறிக்க முயன்ற போலி சாமியார் கைது

கரூர் வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது-34). டெக்ஸ்டைல் தொழிலாளியான இவரது மனைவி பெயர் பிரியா (வயது-28). இவர் புதன்கிழமை மாலை தனது வீட்டிலிருந்த போது அங்கு வந்த ஒரு சாமியார் அம்மா தாயீ... இந்த வீட்டிலே ஒரு கெட்டகாரியம் நடக்கப் போகுது, அத உன்னாலே தடுக்க முடியும்... என்று சொல்லியுள்ளார்.

இதை கேட்டு வெளியே ஓடிவந்த பிரியாவிடம், உன்னுடைய கணவருக்கு தோஷம் உள்ளது, அதை உடனடியாக போக்கவேண்டும் இல்லையானால் அவருடைய உயிருக்கு ஆபத்து என சாமியார் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட பிரியாவும், அவரது கனவர் ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். தோஷம் கழிக்க என்ன செய்ய வேண்டும் என சாமியாரிடம் கேட்டதற்கு, தாலி நிலைக்க செய்யப்படும் பூஜை என்பதால் தாலியை கழற்றி புளிக்குள் வைத்து சுவாமியை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

சாமியாரை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்த பிரியாவும், ஆறுமுகமும் சாமியாரை உட்கார சாமி படத்தின் முன்பாக உட்கார வைத்து பரிகாரம் செய்யச் சொல்லியுள்ளனர்.

பிரியாவிடமிருந்த ஒரு பவுன் தாலியை கழற்றிக்கொடுக்கச் சொன்ன சாமியார் தாலியை ஒரு புளி உருண்டைகள் வைத்து உருட்டி பிரியாவின் கையில் கொடுத்துள்ளார். இந்த உருண்டையை எடுத்துக்கொண்டு நாளை காலை கரூர் ஈஸ்வரன் கோயிலுக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அடுத்தநாள், புளி உருண்டையை எடுத்துக்கொண்டு போன ஆறுமுகம் பிரியாவிடம் இருந்து புளி உருண்டையை வாங்கிய சாமியார், அவர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்துள்ளார். அப்போது புளி உருண்டையை இரு உருண்டையாக பிடித்துக்கொண்டு ஒரு உருண்டைக்குள் உங்கள் சங்கிலி உள்ளது. அதனை சாமி அறைக்குள் வைத்து பூஜை செய்யுங்கள் தோஷம் கழிந்துவிடும், மறு உருண்டையை நான் எடுத்துச்சென்று பூஜை செய்கிறேன் எனக்கூறிவிட்டு புளி உருண்டையுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சாமியார் போனபிறகு, புளி உருண்டையை உடைத்துப்பார்த்தபோது அதில், பிரியாவின் தாலி இல்லை. இதையடுத்து ஆறுமுகம் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் சாமியாரை துரத்திப்பிடித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தாலி நிலைக்க பரிகாரம் செய்தசாமியார், திருச்சி மாவட்டம் தொட்டியம் அரங்கனூரைச் சேர்ந்த சரவணன் (வயது-37) என்பதும், இவர் போலி சாமியார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template