கன மழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று வடகிழக்கு பருவமழையும் தொடங்கியது. சென்னையில் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை வரை இடி-மின்னலுடன் மழை விட்டு, விட்டு பெய்தது.

சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மைலாப்பூர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், பெரம்பூர் என சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.இதனால், மாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கொட்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மாவட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நெல்லை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template