நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர், அந்த நிலையத்தின் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார் என்றும், அந்த தாக்குதலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் அந்த இளைஞரை சுட்டதாகவும், அதில் அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவும் சொல்லும் காவல்துறையின் கூற்று ஏற்கத்தக்கதாக இல்லை. தமிழக காவல்துறையினர் தன்னிச்சையாகவும், தான் தோன்றித் தனமாகவும் செயல்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்த இடதுசாரி கட்சி விடுத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுத்துள்ளது. இது ஜனநாயக விரோத, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் தீர்ப்பால் சிறைப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அனுமதிக்கும் காவல்துறையினர், எதிர்க்கட்சிகளுக்கு அதே உரிமையை மறுப்பது சட்டத்துக்கு முரணான செயலாகும். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலையிட்டு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் காவல்துறையினரின் இப்படிப்பட்ட தவறான செயல்பாடு தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் விரோதமாக முடியும் என சீமான் கூறியுள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment