புலிகள் செய்ததை 2015 இல் செய்வதற்கு திட்டம் வகுக்கிறது அரசு!

2015 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்கு களை சூறையாடுவதற்கு அரசு திட்டம் தீட்டி வருகின்றது என்றும், இதன் முன் னோடியாகத்தான் அங்குச் செல்லும் வெளி நாட்டவர்களுக்கு பயணக் கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ்சாட்டியது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர் கள், சிவில் பிரதிநிதிகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோர் வடக் குக்கு செல்வதை தடுப் பதற்கும், தனக்கு விசுவாசமானவர்களை அங்கு அனுப்புவதற்குமே இந்தத் திட்டத்தை அரசு அமுல்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஐ.தே.கவின் தலைமைத்துவச் சபை உறுப்பின ரான லக்ஷ்மன் கிரியயல்ல எம்.பி., 2005 ஆம் ஆண்டில் புலிகள் செய்ததையே தற்போது மஹிந்த அரசு செய்வதாக வும் சாடினார்.

வடக்கு மாகாணத்துக்கு செல்லும் வெளி நாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித் துள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி நேற்று லங்காNNக்கு  கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ அவசர ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு தயாராகி வருகின்றார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. இந்நி லையில், வடக்கு மக்களின் ஆதரவு அரசுக்கு கிடைக் காது என்பது தெட்டத்தெளிவு. எனவே தான், வடக் கில் வாக்குக் கொள்ளையடிப்பதற்கு அரசு திட்டம் தீட்டிவருகின்றது.

இதன் நிமிர்த்தம்தான் திடீரென வடக்குக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் இவ்வாறா னதொரு பயணக் கட்டுப் பாட்டை விதித்தால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். இதைக்கருத்திற்கொண்டு தான் முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் காலங்களில் வெளிநாட்டு சுயாதீனக் கண்காணிப்பாளர்கள், ஊடகவிய லாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் வடக்குக்குச்சென்றால், அங்கு அரசின் அராஜ நடவடிக்கைகள் வெளிச் சத்துக்கு வந்துவிடும். இதை கட்டுப்படுத்ததான் அரசு மேற்படி திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.சுயாதீன வெளிநாட்டவர்களுக்கு தடை விதித்தால், வடக்கிலுள்ள இராணுவத்தைக் கொண்டு தனது திட்டத்தை அரசு இலகுவில் நிறைவேற்றிவிடும் அபாயம் இருக்கின்றது.
அத்துடன், தனக்கு தேவையான வெளி நாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கமும் இதில் மறைந்தள்ளது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது புலிகள் செய்ததையே இந்த அரசு செய்வதற்கு முயற்சிக்கின்றது என்றும் குறிப்பிட்டார் லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template