யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தின் ஆற்றங்கரையோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி அடையாள அட்டைகள் மற்றும் வாகனங்களின் காப்புறுதி, வரிப்பத்திரங்கள் என்பன இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் ஒதுக்கு புறமாகவுள்ள குகைபோன்ற இடத்தில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.
இவை மீட்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் வந்ததும் அவர்களிடம் இவற்றை ஒப்படைக்கவுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தங்களுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment