இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருப்பதாக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது,

இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். நான் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மோடி உரையாற்ற இருக்கிறாரே என்ன செய்யப் போகிறார்கள்? - என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி இருப்பினும் எப்போது மோடி இலங்கைக்கு செல்வார் என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template