இரத்தினபுரி - எம்பிலிபிட்டி வீதியில் கவுடுவாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தை அடுத்து இரண்டு பஸ்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment