பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு 300 மில்லியன் இழப்பீடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்னவென அரசாங்கம் இவ்வருடம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது கை,கால்கள் இழந்த மற்றும் வீடு, சொத்துக்களை இழந்த பொது மக்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி கிளிநொச்சி - இரனைமடு பகுதியில் இழப்பீடு வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு 130 மில்லியன் இழப்பீடு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 100 இடங்களை புனரமைப்புச் செய்யும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template