குழந்தையை சரமாரியாக தாக்கும் தாய்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார்.

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template